தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

சற்றுமுன்

chennai-meteorological-deptசென்னை தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், திருப்பூரில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் 20 மி.மீட்டரும், கோடைக்கானல், கழுகுமலை ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்த மட்டில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாள்களாக, தென் மாவட்டங்களில் கோடைக்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரையில் 97.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருச்சியில் 96-ம், பாளையங்கோட்டையில் 94 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.