kamalalayam tn bjp - 2026

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

உரத்த சிந்தனை அரசியல்
kamalalayam tn bjp - 2026

முரளி சீதாராமன்

1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- “ஏப்ரல் 4 அன்று பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்!”

2) அதே பாலிமர் டிவியில் கீழே ஸ்க்ரோல்:-
“ஏப்ரல் 3 பாண்டிச்சேரி பிரசாரத்துக்கு வரும் மோடி – சென்னையில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து – வேட்பாளர்கள், தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யப் போகிறார்.

3) அனைவரும் எதிர்பார்த்தபடி மத்திய பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை.

4) கோவையில் இருந்து அண்ணாமலை பாண்டிச்சேரி சென்று அங்கே ரோட் ஷோ – மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம்.

5) பிரசாரத்தின் இடையில் சென்னை வரச் சொல்லி அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அழைப்பு. அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை வருகை.

6) கமலாலயத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் பியூஷ் கோயல் கலந்தாலோசனை.

7) சில நாள்களில் பாஜக பட்டியல் வெளியாகும் – என்று பியூஷ் கோயல் அறிவிப்பு.

JUST I AM CONNECTING THE DOTS. நல்ல முடிவு வரும் என்று நம்புவோமாக.

1984 ல் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. பல பாஜக அபிமானிகள் காங்கிரஸ் மாதிரி பாஜக என்று வளரும் என்று ஏங்கினார்கள்.

பாஜக வளர்ந்தது – மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் மாதிரி மத்திய அதிகாரத்திலும் – பாரதம் முழுக்கப் பரவலாக ஆட்சி அதிகாரத்திலும் பாஜக வளரவேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுப் பிரார்த்தித்து இருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடம் மொட்டையாகக் காங்கிரஸ் மாதிரி பாஜக வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததன் பலன்…

இப்போது பாருங்கள்… கட்சிக்குள் உள் விளையாட்டு, தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல், வேட்பாளர் தேர்வில் இழுபறி… இப்படிப் பலவற்றிலும் காங்கிரஸ் மாதிரியே வளர்ந்து தொலைத்து இருக்கிறது!

சத்திய மூர்த்தி பவனுக்கும் கமலாலயத்துக்கும் என்ன வித்தியாசம்?

வேட்பாளர் தேர்வில் இழுபறி… ஒருவர் கட்சி போட்டியிட ஏதுவாக ஆண்டுக் கணக்கில் உழைத்து களத்தை தயார் செய்திருப்பார் – அவர் மீது உள்ள அசூயையில் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்து விடுவது…

மேலிடப் பார்வையாளரிடம் தங்கள் பார்வையில் என்ன படுகிறதோ அதையே கட்சியின் அடிமட்ட RANK AND FILE பார்வைபோல BRIEFING செய்வது… தனக்கு வேண்டாதவரைப் போட்டுக் கொடுப்பது, அல்லது அவருக்கு வாய்ப்பான தொகுதியை ஃப்யூஸ் பிடுங்கி விடுவது…

இப்படி பல விஷயங்களில் சத்திய மூர்த்தி பவனும் – கமலாலயமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றே ஒரு அரசியல் பார்வையாளனாகக் கருத வேண்டியுள்ளது. என்ன சத்தியமூர்த்தி பவன் என்றால் சேர்கள் பறப்பு, சட்டை கிழிப்பு, வேட்டி பறிப்பு என்றெல்லாம் நடக்கும் என்பார்கள்.

திமுக 1989 ல் காங்கிரஸ் பற்றி போஸ்டரே ஒட்டியது:- “ஊருக்கு ஊரு இருபது கோஷ்டி – ஊழியர் கூட்டத்தில் கிழியுது வேஷ்டி!”

கமலாலயத்தில் மரியாதையாக ஒருவரை ஒருவர் ஜி ஜி என்றழைத்து கும்பிட்டுக் கொள்வார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.