spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

உலத்திலேயே மிகப் பெரிய முட்டாள் திருவள்ளுவர்தான்..!

- Advertisement -

‘மாட்டுக்கறியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக்கொல்கிறார்கள். முதலில் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள். பிறகு எதைச் சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள். நான் எந்தக் கறியையும் சாப்பிடுவேன். அது என்னுடைய விருப்பம்’ என சீமான் பேசியுள்ளார்.

உலத்திலேயே மிக பெரிய முட்டாள் திருவள்ளுவன் தான்..!

நான் என்ன உணவு உண்ண வேண்டும் நான் தான் தீர்மானிக்க வேண்டும் எனக்கு இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையாகும்

அப்படியானால் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்று பத்து திருக்குறள்கள் எழுதுகிறாறே அவர் முட்டாள் தானே பிஜேபி சொன்னால் இந்துத்துவா அப்ப திருவள்ளுவர் சொன்னால் என்னத்துவா?

மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும் திருவள்ளுவர் சொல்வதையாவது கேளுங்கடா மானங்கெட்டவனுகளா, திருக்குறளையும் மதிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் தங்களை தமிழர் என்று பெருமை பேச வேண்டாம்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். 251

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

அருளல்ல(து) யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்ல(து) அவ்வூன் தினல். 254

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா(து) அளறு. 255

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

தினற்பொருட்டால் கொல்லா(து) உலகெனின்
யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 256

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 257

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால், உங்கள் அன்பு எங்கே! கிருஸ்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இந்த தவறை செய்கிறார்கள்.

  • நெல்லை சுரேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe