sengottai rail users asoociation met drm - 2026

நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!

நெல்லை சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sengottai rail users asoociation met drm - 2026

நவ.14 சனிக்கிழமை நேற்று செங்கோட்டை வந்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளரை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க பொருளாளர் முன்னாள் DRUCC உறுப்பினர் S. சுந்தரம் மற்றும், PRO S. ராமன் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தனர்.
அப்போது கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் IRSE, உடனே நிறைவேற்ற வேண்டும் என்றால் எந்தக் கோரிக்கையைக் கேட்பீர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு திருநெல்வேலி- கொல்லம் & கொல்லம் – திருநெல்வேலி பகல் நேர ரயில்கள்.உடனடித் தேவை என அவர்கள் பதிலளித்தார்கள்.

இருவரும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது…

தங்களை செங்கோட்டை ரயில் நிலையத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
கீழே குறிப்பிட்டுள்ள எங்கள் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து ஆவன செய்ய பணிவன்புடன் வேண்டுகிறோம்.

1. சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கு வைகை எக்ஸ்பிரஸ் போன்று இரண்டு பகல் நேர ரயில்களை தாம்பரம் – கொல்லம் மற்றும் கொல்லம் தாம்பரம் இடையே விருத்தாசலம் திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு புனலூர் கொட்டாரக்கரை வழியாக கொல்லத்திற்கும் தாம்பரத்திற்கும் இயக்க வேண்டும்.

2. மீட்டர் கேஜ் காலத்தில் இருமுனைகளில் இருந்தும் சேரன்மாதேவி கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் கீழக்கடையம் பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி —-கொல்லம் & கொல்லம் — திருநெல்வேலி பகல் நேர ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.

3. செங்கோட்டை- ஈரோடு, செங்கோட்டை- மயிலாடுதுறை, செங்கோட்டை- திருநெல்வேலி, செங்கோட்டை- மதுரை முன் பதிவில்லா ரயில்களில் பயணிகள் நலன் கருதி கூடுதல் பெட்டிகளை உடனடியாக இயக்க வேண்டுகின்றோம்.

4. மதுரை – குருவாயூர் & குருவாயூர் – மதுரை வழி செங்கோட்டை ரயில்களில் தற்போது உள்ள முன் பதிவில்லா பெட்டிகளை குறைக்காமல் கூடுதலாக முன்பதிவு வசதியுள்ள ஏசி செயர் கார் ஒன்றையும் , முன்பதிவு வசதியுள்ள ஏசி இல்லாத செயர் கார் ஒன்றையும் இணைக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

5) கொல்லம் – தாம்பரம் 16102 & தாம்பரம் – கொல்லம் 16101 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) தற்போது வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் கீழ்கண்ட அதிவேக ரயில்களை தினசரி ரயில்களாக இயக்க உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.

a)தாம்பரம் – செங்கோட்டை 20681 & செங்கோட்டை – தாம்பரம் 20682 சிலம்பு ரயில்கள் வழி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை
காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி
விருத்தாசலம் விழுப்புரம்

b) தாம்பரம் – செங்கோட்டை 20683 & செங்கோட்டை – தாம்பரம் 20684 வழி தென்காசி பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி திருநெல்வேலி விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகங்கை காரைக்குடி
அறந்தாங்கி பட்டுக்கோட்டை
முத்துப்பேட்டை
திருவாரூர் மயிலாடுதுறை
சிதம்பரம் விழுப்புரம்

7) செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேலும் ஒரு நடைமேடையாக ஐந்தாம் நடைமேடை அமைந்திட விரைந்து ஆணை தர வேண்டும்.

8) செங்கோட்டை ரயில் நிலையத்தை அடுத்த கட்ட அம்ருத் பாரத் ரயில் நிலையங்கள் விரிவாக்க திட்டத்தின் கீழ் சேர்த்திட வேண்டுகிறோம்.

மேற்கண்ட எங்களது நீண்ட கால கோரிக்கைகளை பரிவோடு பரிசீலித்து
ஆவன செய்ய வேண்டுகிறோம் .

Posts by Dhinasari Reporter: