sabarimala mandala pooja natai open today - 2026

41 நாள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

சற்றுமுன் ஆன்மிகச் செய்திகள் இந்தியா சுற்றுலா லைஃப் ஸ்டைல்
sabarimala mandala pooja natai open today - 2026

41 நாள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

41நாள் மண்டல கால பூஜைகளுக்காக உலகப் பிரசித்தி பெற்ற கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று கார்த்திகை முதல் நாள் திறக்கப்பட்டது.

அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்திபுதிய மேல்சாந்தி அரீக்கரை சுப்பிரமணியம் சங்கரன் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையைத் திறந்து வைத்து விளக்கேற்றியதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கியது.

ஆண்டு தோறும் கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் ஆகும். 41 -வது நாள் மண்டல பூஜையுடன் இது நிறைவு பெறும். இதற்காக சபரிமலை நடை திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.

ALSO READ:  தீபாவளி சிறப்பு ரயில்கள்; முன்பதிவு தொடங்குகிறது!

கடந்த இரண்டு நாட்களாகவே நிலக்கல்லில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் அதிகமானதால் அங்கு நிலைமை மோசம் அடைந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நேரத்துக்கும் முன்னதாகவே பம்பைக்கு பக்தர்களை போலீசார் அனுமதித்தனர். பம்பையிலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்னதாகவே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாலை 5.00 மணிக்கு பதிலாக மாலை 4.00 மணிக்கே நடை திறக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் பிரசாத் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றிய பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் படியாக கீழே வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.

பின்னர் 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகளான சபரிமலை – சுப்பிரமணியன் நம்பூதிரி, மாளிகைப்புரம் – தாமோதரன் நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து சன்னதி முன் அழைத்து வந்தார். அங்கு அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தந்திரி பிரம்மதத்தன் இவர்களுக்கு அபிஷேகம் செய்து முறைப்படி மேல் சாந்தியாக பதவி ஏற்க செய்தார்.

ALSO READ:  சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!

இன்று அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்தி சுப்பிரமணியம் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றினார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கியது.

தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம்,உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். தினமும் காலை 3:00 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணிவரையும் நடை திறந்திருக்கும்.

நிலக்கல் பம்பை பாதையில் 60 ஆயிரம், எரிமேலி பெருவழிப்பாதை, வண்டிப்பெரியாறு-– சத்திரம் பாதையில் தலா மூவாயிரம் பேர் என தினமும் 66,000 பேருக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் வசதி பம்பையில் நிறுத்தப்பட்டு விட்டது. நிலக்கல்லில் 10 ஆயிரம், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு பாதையில் தலா 2000 பேருக்கும் ஸ்பாட் புக்கிங் அனுமதி வழங்கப்படும்.

பாதுகாப்பு பணியில் 3205 போலீசாரும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக 500 போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  நவராத்திரி பற்றி பாரதியார்

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam