துபாயில் அடுத்த ஐபிஎல் போட்டிகள்?

சற்றுமுன் விளையாட்டு

பனிரெண்டாவது ஐபிஎல் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதியில் இருந்து மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும் எனத் தெரிகிறது.IPL Captains - 2026

இதுகுறித்து பேசிய பிசிசிஐ ராஜீவ் சுக்லா, இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் அடுத்த ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடத்தலாம் என்று தெரிவிக்கிறது. இதுகுறித்து குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இந்தியாவில் பொது தேர்தல் சீக்கிரமே நடந்தால், பனிரெண்டாவது ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே 2009-ல் தென்னாப்பிரிக்காவிலும் 2014-ல் அமீரகத்திலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.