இரும்புத்திரை வசூல் செய்த 5 கோடியும், 50 கோடியும்

சினி நியூஸ் சினிமா

irumbuthirai8 - 2026 விஷால் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி 27ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. விஷால் படம் ஒன்று சென்னையில் ரூ.5 கோடியும், உலகம் முழுவதும் ரூ.50 கோடியும் வசுலாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

irumbu thirai - 2026இருப்பினும் வரும் வியாழன் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இந்த படம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தூக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.