தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.
சனிக்கிழமை இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் சென்றார். அந்த விமானம், திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியஸில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம், மொரீசியஸ் அருகே சென்றபோது சுமார் 14 நிமிடங்கள் தகவல் தொடர்பு அற்றுப் போயுள்ளது. இதனால், திடீரென குழப்ப நிலை ஏற்பட்டது. மொரிஷீயஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக எச்சரிக்கை செய்யப் பட்டனர். பின்னர் 14 நிமிடங்கள் கழித்து ரேடார் சிக்னல் கிடைக்கப் பெற்றுள்ளது.
விமானத்தின் தொடர்பு கிடைத்ததை தொடர்ந்து, திடீரென ஏற்பட்ட குழப்ப நிலை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க உச்சி மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
India’s Foreign Minister, @SushmaSwaraj meets @DIRCO_ZA Minister @LindiweSisuluSA as she arrives at Sefako Makgatho guesthouse for the #BRICS Ministers of Foreign Affairs/International Relations reception dinner. #BRICS #BRICSZA pic.twitter.com/HamcONLv0h
— BRICS_10 (@BRICS_10) June 3, 2018




