வென்னிமலையில் சூரசம்ஹாரம்

ஆன்மிகம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது
 காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சஷ்டி ஹோமம், தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை முருக பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து பக்தர்கள்  செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.