அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும்; சண்டையிடவும் முடியும்: ராகுல்

இந்தியா சற்றுமுன்

04 July26 Rahul Gandhi - 2026டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்ட விழாவில் பேசிய ராகுல், பாரளுமன்றத்தில் மோடியை கட்டிபிடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், இப்போதெல்லாம் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் எனக்கு எதிரில் வந்தால், எங்கே நான் கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து 2 அடி பின்னால் தள்ளி நிற்கிறார்கள். என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டைப் பற்றிய அத்வானி கருத்தும், என் கருத்தும் வேறு வேறானது. அதற்காக அவருடன் சண்டையிட்டாலும் வெறுக்க வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 thought on “அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும்; சண்டையிடவும் முடியும்: ராகுல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.