பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை! டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

police karunanithi house - 2026

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என்று டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்!

காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப் படுவதாகவும், . எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் செல்போன் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப் பட்டுள்ளது.

பணி நேரத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் காவலர்கள் பொழுது போக்குவதாக எழுந்த புகாரால் டிஜிபி அலுவலகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறு சிறு குற்றங்கள் கூட, சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் செல்போன் கேமரா மூலம் கண்டறியும் நிலையில், தமிழக காவல்துறையின் அறிவிப்பு  காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு இருந்தும் நடைமுறையில் யாரும் பின்பற்றுவதில்லை.

விஐபிக்கள் பாதுகாப்பு, முக்கிய சம்பவங்கள் போது காவலர்கள் மூலம் ரகசியங்கள் கசிவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.