ஈரான் சபாஹர் துறைமுகம் இப்போது இந்தியாவின் கைகளில்! மோடியின் திறந்த மனதுக்குக் கிடைத்த வெற்றி!

கட்டுரைகள் தலையங்கம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
iran chabahar port - 2026
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுக திறப்பு விழாவில்…

ஈரானின் சபாஹர் துறைமுகம் இந்தியாவின் கைகளில் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, மோடியின் தாராள மனதுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப் படுகிறது.

இந்திய வெறுப்பாளர்கள், மோடியை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி, அவரை இந்து தீவிரவாதியாக சித்திரித்து, நாடே அமைதியின்மையில் சிக்கிவிடும் என்றும், இதனால் இஸ்லாமியர்கள் அழிக்கப் பட்டு விடுவார்கள் என்றும் பிரசாரம் செய்தார்கள். ஆனால், மோடி பிரதமர் ஆன பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு வளைகுடா நாடுகள், குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மோடிக்கு ஆதரவு அளித்ததுடன், தங்களது வர்த்தக உறவை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் என்ற ஒற்றை நாட்டின் மீதுள்ள பாசம் கண்ணை மறைக்க காங்கிரஸ் ஆடிய நாடகங்களால் இந்தியா இழந்தது அனேகம்.

இந்நிலையில் மோடியின் இந்தியா தற்போது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சபாகர் துறைுமுக நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. ஈரானின் தென்னக கடற்கரை பகுதியின் சக்தி மிகு ( energy-rich) சிஸ்டன்-பலுசிஸ்தான் அமைந்துள்ள சபாகர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி!.

தனது எல்லைக்குள் இல்லாத துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை.!

ஈரான்,ஆப்கன் மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து சபாகரில் India Ports Global Chabahar Free Zone (IPGCFZ) அலுவலகத்தை தொடங்கினர்.

டிசம்பர் 29,2018ல் துறைமுகத்துக்கு தேவையான அனைத்து கார்கோ மேலாண்மை கருவிகள் என அனைத்தும் பணிகளும் முடிவடைந்தது.முதல் கப்பலாக சைப்ரஸ் நாட்டின் 72458 மெகா டன் கப்பல் வந்துள்ளது. ஆப்கனுக்கு இந்த துறைமுகம் பெரிய அளவில் உதவும்.

இந்தியா ஆப்கனுக்கு பெரிய அளவில் உதவி வருகிறது. மேலும் பாகிஸ்தானின் பயங்கரவாத கொட்டத்தை அடக்க உதவும். இனி இந்திய கடற்படை இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும்.

2003இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே சபாஹர் துறைமுகம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப் பட்டாலும், அது கிடப்பில் போடப் பட்டது. மோடி பிரதமர் ஆன பின்னர், வாஜ்பாயின் சீரிய நோக்குகளை கைகளில் எடுத்து சாத்தியப் படுத்தினார். அந்த வகையில் 2015ல் தான் சபாஹர் ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. சபாகரில் இருந்து பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வெறும் 80 கிமீ தான் என்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.