இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு; ராணுவ முகாமிலிருந்து கௌசல்யா சஸ்பெண்ட்

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை லைஃப் ஸ்டைல்
kausalya bbc - 2026

நீலகிரி: குன்னூரிலுள்ள வெலிங்டன் கண்டோன்மென்டில் இருந்து உடுமலை கௌசல்யா பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கௌசல்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது கண்டோன்மெண்ட் நிர்வாகம்!

அண்மையில் சாதி மறுப்புத் திருமணம் என்ற பெயரில், தம் ஆசைகளை பெற்றோர் மீது திணித்து, அதற்கு எதிராக இருந்ததால், பழி வாங்கியே தீருவேன் என நீதிமன்றப் படிகளில் ஏறியவர் கௌசல்யா என்ற பெண். இதனால் செய்திகளில் அதிகம் அடிபட்டவர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் சங்கர் தனது பெற்றோரால் கௌரவத்தைக் காக்க கொலை செய்யப் பட்ட பின்னர், மிகக் குறுகிய காலத்தில், சக்தி என்ற வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது இந்தத் திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், மீண்டும் செய்திகளில் அடிபட்டார் கௌசல்யா. அவரை ஊடகங்கள் வீராங்கணையாக சித்திரித்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டன.

இந்நிலையில், பிபிசி தமிழ் அவரிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ளது. அதில், தாம் இந்தியர் என்ற உணர்வையும் இந்தியா என்ற நாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர் சமூக ஊடகங்களில்! இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்தியர் என்ற உணர்வுடனும், இந்தியா என்ற நாட்டின் இறையாண்மையிலும் நம்பிக்கை உள்ளவரே இந்தியர் என்று கருதப் படுவார். அவ்வாறு இல்லாத ஒருவர் எப்படி வெலிங்க்டன் ராணுவ முகாமில் பணியில் இருக்கிறார் என்று கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு வெலிங்டன் கண்டோன்மென்ட்டிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.