ஆக.. ஆக.. தாத்தா ஊதிய மங்கள வாத்தியத்தை கேலி செய்தா… சோறு சீரணிக்காது தலைவா!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
stalin - 2026

இந்து திருமண முறைகளை, இஸ்லாமிய மேடையில் சென்று நின்று வசைபாடி திட்டித் தீர்த்து அவமரியாதை செய்து ஹிந்துக்களையே இழிவுபடுத்தியிருக்கிறார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!

இந்து என்றால் திருடன் என்று எழும்பூரில் ஒரு கூட்டத்தில் சொல்லி கடந்த 2002ஆம் ஆண்டு கருணாநிதி ஒரு புயலைக் கிளப்பினார். வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது. கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் அவ்வாறு சொல்லவில்லை என்று அடம்பிடித்தார் கருணாநிதி,. தொடர்ந்து, தேவாரப் பாடல் திரட்டு, திருவாசகம் என மேய்ந்தார். உள்ளம் கவர் கள்வன் என இறைவனைப் பாடிய வரிகளை எடுத்து ஏதேதோ விளக்கம் தர முயன்றார்.

இப்போது அவர் மகன் இந்து மத சடங்குகளை இழிவுபடுத்தி இஸ்லாமியரின் மேடையில் பேசியிருக்கிறார். இது கடந்த சில நாட்களாக உலா வருகிறது. ஆயினும் ,இதற்காக வருத்தமோ, மன்னிப்போ இதுவரை ஸ்டாலின் கேட்கவில்லை. இந்த நிலையில், இந்துக்கள் ஸ்டாலினை புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை சமூக வலைத்தளங்களில் அன்பர்கள் விடுத்து வருகின்றனர்.

பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.

stalin opp - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.