இது தான் பாமக., – அதிமுக., கூட்டணி உடன்படிக்கை!

சற்றுமுன் சென்னை

admk pmk alliance - 2026

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாமக., இடம் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக., பாமக., கூட்டணி ஏற்பட்டுள்ளது. 2009க்குப் பின்னர் அதிமுக- பாமக., கூட்டணியில் இணைந்துள்ளது!

கூட்டணி குறித்து பாமக., ராமதாஸ் குறிப்பிட்ட போது,

காவிரி பாசன மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பு;
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
7 தமிழர் விடுதலை செய்ய வேண்டும்
தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு
மணல் குவாரி படிப்படியாக மூட வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
கூட்டுறவு வங்கியில் உள்ள பயிர் கடன் தள்ளுபடி –
உள்ளிட்ட 10 கோரிக்கையை பாமக அதிமுக.,விடம் முன்வைத்துள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதாக அதிமுக., கூறியுள்ளது. இதை அடுத்து அதிமுக.,வுடன் பாமக., கூட்டணி அமைந்துள்ளது. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் கூறினார்.

pmk admk alliance statment - 2026

மேலும், அ.தி.மு.க. – பா.ம.க.கூட்டணி “மக்கள் நல கூட்டணி- “மெகா கூட்டணி”
என்று ராமதாஸ் அறிவித்தார்.

முன்னதாக, கூட்டணி குறித்துக் கூறிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் பாமக.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானிக்கப் பட்டது. 7 மக்களவைத் தொகுதியுடன் 1 மாநிலங்களவையும் ஒதுக்கப் பட்டுள்ளது. 21 தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு பாமக முழு ஆதரவு தரும் என்று கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.