விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்.. நல்ல தொடக்கம்! அரசியல் ஆக்கவேண்டாம்!

உரத்த சிந்தனை துணுக்குகள் பொது தகவல்கள்

modi poorman - 2026

இப்போது மோடி அரசு இரண்டு ஹெக்டேர் நிலம் மற்றும் அதற்கும் குறைவாக நிலம் இருந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் மூன்று தவணைகளில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்து முதல் தவணையை வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர்.

இதனை பற்றி தேர்தல் ஆதாயம் என விமர்சனம் செய்பவர்கள் உண்டு விவசாய கடன் தள்ளுபடியில் தான் எண்ணூறு பேருக்கு நானூறு கோடிகள் என கணக்கில் காட்டி பணக்கார அரசியல் விவசாயிகள் பங்கு போடுவார்கள்.

இந்த தொகை வருடம் மூன்று முறை பருவ காலத்தில் விவசாய செலவில் ஒரு பகுதியை ஈடு கட்டும்.அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் ஒருமுறை அகவிலைபடி கொடுப்பார்கள். அது போல வருடம் மூன்று தடவை இரண்டாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதில் தவறு இல்லை.

மாநில அரசு கூட இலவச திட்டங்களை குறைத்து தனது பங்குக்கு விவசாயிகளுக்கு கூடுதலாக சில ஆயிரம் ரூபாய் கொடுக்க தடை இல்லை.இது நல்ல தொடக்கம் .இனி பிரதிவருடமும் வருங்காலங்களில் தொடரும்.

விவசாயிகள் உழைத்து சம்பாதிப்பவர்கள் தான். அவர்களுக்கு சாகுபடியில் உதவிடதான் இந்த தொகை பயன்படட்டுமே. எனவே துவக்கி வைத்தால் யாரும் நிறுத்த முடியாது. அந்த வகையில் நல்ல எண்ணம் நல்ல தொடக்கம்.

ஜாபர் ஷெரீப் ரயில்வே அமைச்சர் ஆக பணியாற்றியபோது பெங்களூர் டூ சென்னைக்கு லால்பாக் என்ற பெயரில் ஒரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டார்கள். எதற்காக அந்த ரயில் விடப்பட்டது என்றால் ஜாபர் ஷெரீப் மகள் வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்.சி. மருத்துவக் கல்லூயியில் மருத்துவப் படிப்பு வந்தார்.

அவரது மகள் தினம் காலை பெங்களூரில் கிளம்பி காட்பாடியில் காலை ஒன்பது மணிக்கு இறங்கி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் அதே ரெயிலில் பெங்களூர் சென்று விடுவார்.

இவ்வாறு தினமும் பெங்களூரில் இருந்து காட்பாடி வந்து திரும்ப வசதியாக அந்த ரயில் துவக்க பட்டாலும் அதன் மூலம் கூடுதலாக ஒரு ரயில் வசதி கிடைத்தது பல ஆயிரம் பயணிகள் பயன் அடைந்துள்ளனர் .

அவரது மகள் படிப்பு முடிந்த பின்னர் சில கூடுதல் நிறுத்தங்களுடன் இன்னும் சிறப்பாக இயங்கி பயன் தருகிறது. இதற்கு காரணம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப்தான்.

ஆகவே….  இந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து பயன் தரும். எனவே இதனை அரசியல் ஆக பேசவேண்டாம்.

– கார்த்திகேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.