திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்! பாமக., தொண்டர்களுக்கு ராமதாஸ் கட்டளை!

சற்றுமுன் சென்னை தமிழகம்

ramadoss - 2026

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர் தொல்.திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்; அதற்கு பாமக, தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், சிதம்பரம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரை அறிமுகப்படுத்திப் பேசினார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

அப்போது அவர்,: காடுவெட்டி குரு இல்லாத பிரசார பொதுக்கூட்டத்தில் எதுவும் என்னால் பேச முடியவில்லை. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை நிறுவியவர் ஜெ.குரு. எனவே, அவரை நினைத்து அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நான் வளர்த்த ஒருவர் (திருமாவளவன்)  சமூகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில்
ஈடுபடுவார் என்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்தத்
தேர்தலில் அவருக்கு மக்கள் கொடுக்க  வேண்டிய பரிசு டெபாசிட் இழக்கச் செய்வதுதான் என்று தொண்டர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.