விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்! சொல்கிறது காங்கிரஸ்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

congress scheme - 2026

களவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்..!  காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது!

மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்! அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள் !

விலைவாசி கடுமையாக உயரவேண்டும்; அப்போது தான் அரசுக்கு நல்ல வரி வருவாய் கிடைக்கும். இப்போதைய மோடி அரசு விலைவாசியை உயரமால் பார்த்துக்கொண்டது எனவே அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்கவில்லை! எனவே மோடி அரசால் இலவசங்கள் கொடுக்க இயலவில்லை. இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸ் பொருளாதார ஆலோசகர்.

டைமஸ் நவ் டிவியின் பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். எப்படி?

விலைவாசி உயரவேண்டும். மிகக் கடுமையாக அதுவும் மாதம் 20 சதம் உயர வேண்டும். போனமாசம் 20 ரூபாய்க்கு விற்ற அரிசி இந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்க வேண்டும். அடுத்த மாதம் 30 ரூபாய்க்கு விற்கவேண்டும். அப்புறம் 36, 43 என ஐந்தே மாதங்களிலே 50 ரூபாய்க்கு வரவேண்டும். ஒரு வருடத்திற்குள்ளேயே 100 ரூபாய்க்கு விற்க வேண்டும். அப்போது தான் பொருளின் விலைக்கு அரசு போடும் வரியும் உயரும்.

எப்படி என்றால்…?!

50 ரூபாய்க்கு சட்டை வாங்கினால் அரசுக்கு வரி 5 ரூபாய் தான். அதே சட்டையை விலைவாசி ஏற்றத்தால் 500 ரூபாக்கு வாங்கினால் வரி 50 ரூபாய் அரசுக்கு கிடைக்குமே.

அப்படி என்றால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் அதனால் இலவசம் கொடுக்கலாம்.

இப்போது யோசிக்க வேண்டியவர்கள் மக்களே!

மோடி விலைவாசியைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருப்பது தவறு…

விலைவாசி ஏறினால் தான் மக்களை கசக்கிப் பிழிந்து வரி போடலாம். அந்த வரியை எடுத்து எல்லோருக்கும் இலவசம் கொடுப்போம் என சொல்லும் காங்கிரஸ் களவாணிகளை ஆட்சிக்கு வரவிடலாமா… ?

நம் உழைப்பு வீணாக வேண்டுமா?

2014ம் வருடத்துக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இப்படித்தான் அரிசி பருப்பு மளிகைப் பொருள்கள் என எல்லாமே ஏகத்துக்கும் எகிறியிருந்தது. அதன் காரணம் இப்போது நன்கு புரிகிறது!

– ராஜா சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.