தேடப்படும் குற்றவாளியை டூட்டி டைம் இல்லாத போதும் நிர்வாண நிலையில் சென்று பிடித்த போலீஸ்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

nakedpolice - 2026கைதியை நிர்வாண நிலையில் தேடுதல் என்ற புதிய வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்துள்ளார் ஒரு ஆஃப் டூட்டி போலீஸ் ஆபீசர்!

இப்படித்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்வீடன் நெட்டிசன்ஸ்! குற்றவாளியும் போலீஸும் அந்நேரம் நிர்வாணக் கோலத்தில் இருந்தனர் என்பது இதில் குறிப்பிடத் தக்கது!

ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பகுதியில் புறநகர்ப் பகுதியான ரிங்க்பியில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்பா – நீராவிக் குளியலுக்காக நிர்வாண நிலையில் நீராவி குளியல் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே தேடப்பட்டு வரும் போதைக் கடத்தல் குற்றவாளி இருப்பதை அந்த போலீஸ் அதிகாரி கண்டு கொண்டார். அதே நேரம் அந்தக் குற்றவாளியும் இந்த போலீஸ் அதிகாரியை அடையாளம் கண்டு கொண்டார்.

nakedpolicesweden - 2026பணி நேரத்தில் தான் இல்லை; ஓய்வு எடுக்கும் நேரம். உடன் சக போலீஸார் எவரும் இல்லை! ஏதாவத் பிரச்னையானால் சமாளிக்க உதவிக்கு ஆள் இல்லை. இஒப்படி சூழல் எல்லாம் இருந்தும், அவர் சிறிதும் பதட்டப்படாமல், மெதுவாக அந்தக் குற்றவாளியை தற்போது கைது செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

வேறு வழியின்றி அந்தக் குற்றவாளியும் அவரிடம் பிடிபட்டுள்ளார். நிர்வாண நிலையில் இருந்தும் ஒரு போலீஸ் அதிகாரி தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த செய்தி சமூகத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்த தகவலை அரசின் செய்தி ஊடகமான எஸ்விடி ஒளிபரப்பியது. அதில், ரிங்க்பி பகுதியில் துணை காவல் அதிகாரி கிற்ஸ்டோஃபர் போமன் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து இது குறித்த தகவல் அதன் பேஸ்புக்கில் வெளியானது. அந்தப் பாராட்டு மடல்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.