
பாலக் பனி வரகு புலாவ்.
தேவையானவை
பனிவரகு-1கப்,
பாலக் கீரை-1கப்,
பாசிப்பருப்பு-1/2கப்,
பூண்டு-2(தட்டியது),
எண்ணெய், நெய்-2டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-2
,வெங்காயம்-2(நறுக்கியது).
அரைக்க:
தேங்காய்- கால் கப்.
சீரகம்-1/2 டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பு, பனிவரகு அரிசியை ஐந்து நிமிடம் ஊற விடவும்.கீரையை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் நெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் ,பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த பனிவரகு பாசிப்பருப்பு சேர்க்கவும்.இதை நன்றாக கிளறி 3 கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். பாதி வெந்தவுடன் பாலக் கீரையை சேர்க்கவும். உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தேங்காய் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். வெந்தவுடன் இறக்கவும்.சத்தான பாலக் பனி வரகு புலாவ் தயார். இதற்குத் தொட்டுக் கொள்ள சிப்ஸ் ,ஊறுகாய் நன்றாக இருக்கும்.