அட.. அந்தம்மா வெளிப்படையா.. பேசறாங்க.. விடுங்க.. பேசட்டும் விடுங்க… விடுங்க…

Reporters Diary அடடே... அப்படியா? புகார் பெட்டி

Karthi Chidambaram - 2026

எதிர்பார்க்காத வகையில், எசகு பிசகா கேள்வி கேட்டா இவங்கல்லாம் எப்படி அதை சமாளிப்பாங்க… திமுக.,வின் 2ஜி புகழ் ஆ.ராசாவிடம் ஒரு கல்லூரி மாணவி, உங்க வீட்டுப் பிள்ளைங்கள்லாம் தமிழ் மீடியமா படிக்கிறாங்க… அரசுப் பள்ளிகள்லயா படிக்கிறாங்க. என்று கேள்வி கேட்க …. ஆ.ராசா சமாளித்துக் கொண்டே.. நல்ல கேள்வி நல்ல கேள்வி .. அப்படித்தான் கேள்வி கேட்கணும் என்று சமாளித்துக் கொண்டே ஓங்கிச் சொல்லி எதையோ சொல்லி சமாளித்தார். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் பிரபலம்!

அதுபோல்.. சிவகங்கை மக்களவைத் தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாக்கவயல் கிராமத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அங்கே நின்றிருந்த ஒரு பெண் திடீரென கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்து, ‘நீங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு வருவீர்கள்; மற்ற நேரங்களில் வரப் போவதில்லை. இங்கே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு என்ன செய்தீர்கள் செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்டார்.

திடீரென இது போன்ற ஒரு கேள்வி எழுந்ததால், அதை சமாளிக்க முடியாமல் தவித்த கார்த்தி,  ‘வெளிப்படையாக ஒரு கருத்தை சொல்வதே சந்தோஷம்தான். அந்தப் பெண்மணி பேசட்டும்; அவர் கேட்பது நியாயம் தான்’ என்று தொண்டர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து அப்படியே நைஸாக கழன்று கொண்டார்.

அந்தப் பெண்ணின் கேள்வியால் கொதிப்படையும் தொண்டர்கள் அந்தப் பெண்ணை ஏதாவது தாக்கினாலோ பேசினாலோ அதனை வீடியோ எடுத்து பிரச்னையாக்கி விடுவார்கள் என்று பயந்து போன கார்த்தி… தொண்டர்களை கையைக் காட்டி சமாளித்து விட்டு ஓடிவிட்டார்! வன்முறை கும்பல் திமுக.,வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் காரர்கள் அங்கங்கே இப்படி கேள்வி கேட்பவர் மீது தாக்குதலை நடத்தி பெயர் பெற்று வருகிறார்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.