மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த சசிதரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

nirmala sitharaman - 2026

கோயில் துலாபாரம் அறுந்துவிழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை மருத்துவமனையில் சந்தித்து, அவருக்குக் கை கொடுத்து விரைவில் குணமடைய பிரார்த்திப் பதாகக் கூறினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனை வரவேற்றுப் பாராட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சசிதரூர்.

நேற்று மலையாள வருடம் கொல்லம் ஆண்டின் துவக்கமான சித்திரை விஷூ கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் துலாபாரம் செய்ய நேர்த்திக்கடன் செலுத்தினார் சசிதரூர்!

அப்போது துலாபார கொக்கி அறுந்து சசிதரூரின் தலையில் விழுந்ததில், அவரது தலையில் அடிபட்டது. ரத்தம் வழிந்தது. காயமடைந்த அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கேரளா வந்துள்ள ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், சசிதரூரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். சசிதரூருடன் கைகுலுக்கி, புன்னகையுடன் நலன் விசாரித்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சசிதரூர், நிர்மலா சீதாராமனை புகழ்ந்தும் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிர்மலா சீதாராமன், இன்று காலை மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். மனிதநேயம் என்பது இந்திய அரசியலில் அரிதான பண்பு. ஆனால் நல்ல பண்புக்கு உதாரணமாக நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

1 thought on “மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த சசிதரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!”

  1. இப்போது தெரிந்திருக்குமே பி ஜெ பி காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. இனிமேலாவது அவதூறாக பேசுவதை மற்றவர்கள் நிறுத்துவர்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.