யானை வள்ளிக்கு கண்ணீருடன் பக்தர்கள் பிரியாவிடை!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

valli elephant - 2026இலஞ்சி குமார கோவில் யானை வள்ளி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தது. அதன் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நேற்று நடைபெற்றன. அப்போது இலஞ்சி குமரன் கோவில் பக்தர்கள் பெருமளவில் வந்து, யானை வள்ளிக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரு இலஞ்சி குமாரர் கோவில்.  இந்தக் கோவிலுக்கு 2006ல் கடம்பூர் ஜமீன்தார் 2 யானைகளை கோவிலுக்கு அளித்தார்.

அப்போது வள்ளி, தெய்வயானை என்ற பெயருடன் இரு யானைகளும் வளர்க்கப்பட்டன. இந்நிலையில்  யானைகளை பாதுகாக்க சுமார் 12 லட்சம் ரூபாய் தொகையும் டெபாசிட் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2008 ஆம் ஆண்டில் தெய்வயானை என்ற யானை பராமரிப்பு குறைபாடு காரணமாக இறந்தது

இந்த நிலையில் ஏற்கனவே வள்ளி என்ற யானை பராமரிப்பு சரி இல்லாமல் இருந்ததாக வனத்துறை  கண்டித்திருந்த  நிலையில் யானைக்கு நீர் கட்டி இருந்ததாகவும் சரியான பராமரிப்பு இல்லாத நிலையில் நேற்று இந்த யானைக்கு மருந்து அளித்ததாகவும் கூறப்படுகிறது

elanji elephant - 2026நடைப் பயிற்சிக்கு கூட்டிச் சென்ற போது கோவில் வெளிப்பிராகாரத்தில் மயங்கி விழுந்தது யானை வள்ளி.  இதனால் அருகே உள்ள கால் நடை மருத்துவர் அங்கே வந்து சோதித்ததில் யானை இறந்தது உறுதி செய்யப்பட்டது

தற்போது குற்றால வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் யானை 13 வயதில் இறந்த நிலையில் இப்போது இரண்டாவது யானை 18 வது வயதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது!

ஏப்.24 புதன்கிழமை நேற்று கோயில் அருகே இந்த யானைக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்நிலையில் யானை பராமரிப்பின்றி இறந்ததாக புகார் கூறிய தென்காசி, இலஞ்சி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பின்னர் கண்ணீர் அஞ்சலியுடன் யானை வள்ளிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.