சினிமாவுக்கு மிரட்டல் வந்தப்போ நாட்ட விட்டு ஓடி போறேன்னு சொன்னவருதானே..! கமலுக்கு தமிழிசை பதிலடி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று பிரசாரத்தில் பேசினார் அரசியல்வாதியாக அரிதாரம் பூசியுள்ள நடிகர் கமல்ஹாசன்! அப்போது அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவுகளில்…

காந்தியின் கொலையை தற்போது நினைவு கூர்ந்து அதனை இந்து தீவிரவாதம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுவது கண்டிக்கத் தக்கது. அண்மையில் நடைபெற்ற இலங்கை குண்டுவெடிப்பு குறித்து கமல்ஹாசன் ஏன் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அவருடைய திரைப்படம் மதக் குழுக்களால் தடை செய்யப் பட்ட போது, இந்தியாவை விட்டு வெளியேறுவதாக எச்சரித்தார். ஆனால் இப்போது தன்னை உண்மையான இந்தியன் என்கிறார்…

மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது கொலையாளி தூக்கிலிடப்பட்டார் ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத் தனமானதும் ஆபத்தானதும் கூட.

kamalhaasan aravakurichi - 2026புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுப்பது மத விஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே? அரசியல் வேஷம்

தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்

ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை! ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி? அரசியல் நடிப்பு???

இந்து தீவரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனைக் கண்டிக்கிறோம். பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் @CMOTamilNadu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.