
தடையை மீறிய படகு பயணம் பெண் பலியான சோகம்…!
பழவேற்காட்டில் 2 படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் வசதிகாக படகு சவாரி செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் படகு சவாரியால் அப்பகுதியில் மீன்பிடி தொழிலை செய்து வரும் மீனவர்களின் வருமானத்திற்கு வழிவகுக்கும் பெரும் தொழிலாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனா்.
இதையடுத்து ஏரியில் படகு சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சில காலம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பழவேற்காட்டு ஏரியில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படகுகள் எதிர்பாராதவிதமாக 2 படகுகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ஒரு படகு மட்டும் கவிந்தது அதில் பயணம் செய்த 16 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனா் அவர்களை அப்பகுதி உள்ள மீனவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் மேரி ஜான் என்ற பெண் மட்டும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தடையை மீறி படகு சவாரி மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.



