சேவாபாரதி 10 நாள் மகளிர் பண்புப் பயிற்சி முகாம் தொடக்கம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sevabarathi camp1 - 2026

சேவை அமைப்பான சேவாபாரதி தமிழ்நாடு, 10 நாட்கள் மாநில மகளிர் சேவை பண்பு பயிற்சி முகாம் இன்று பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் மூகாம்பிகை, கே கோவிந்தராஜ் அவர்களின் துணைவியார் திருமதி சித்ரா கோவிந்தராஜ்  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.

சேவாபாரதி தர்மபுரி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில அமைப்பு செயலாளர் கா. சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.

sevabarathi camp2 - 2026

சேவாபாரதி தர்மபுரி மாவட்ட பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் பண்புப் பயிற்சி முகாம் வகுப்பில், பயிற்சி பெறுபவர்கள் (சிக்ஷார்த்தி) 153, பயிற்சியாளர்கள் (சிக்ஷிகா) 30, அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் மகளிர் 187 பேர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.