பள்ளிக்கல்வித்துறையின் 11 கட்டளைகள் என்ன?

அடடே... அப்படியா? தமிழகம்

IMG 20190529 113701 - 2026தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 11 கட்டளைகள் பிறப்பித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். பைக், செல்போன், ஸ்மார்ட்போன் பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

IMG 20190529 113727 - 2026லோ ஹிப் , டைட் பேண்ட் அணிந்து வரக்கூடாது. அரைக்ககை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும் அது இறுக்கமாக, குட்டையாக இருக்கக்கூடாது. தலைமுடி சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும் போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

IMG 20190529 113709 - 2026கருப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி. டக் இன் செய்யும் போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக் இன் செய்யக்கூடாது. மேலுதட்டை தாண்டி முறுக்கு மீசை தாடி வைக்க கூடாது.

IMG 20190529 113810 - 2026கைகளில் வளையம் கயிறு செயின் அணியக்கூடாது. பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும். விடுமுறை எடுக்கும்போது பெற்றோர் ஆசிரியர் அனுமதி கையெழுத்து பெற்ற பின் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற 11 கட்டளைகள் பிறப்பித்து அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.