ஊடக விவாதமா?! பாஜக., சார்பில் இனி யாரும் வர மாட்டார்களாமே..!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்

tamilisai soundarrajan 1 - 2026

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது! ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சம வாய்ப்பு இல்லாததால் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது… என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பிறகு அதிமுக.,விலும் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது! வட இந்தியாவில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சிலர் இது போன்ற முடிவுகளை எடுத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்துமே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் அதிகம் இயங்குவதாலும், ஆளும் கட்சி, காங்கிரஸ்,  பாமக உள்ளிட்ட மற்ற பல கட்சிகள் ஊடகங்களை தங்கள் வசம் வைத்துள்ளார் பாஜக இத்தகைய முடிவினை எடுத்துள்ளது ஆனால் இது காலம் கடந்த முடிவு என்று பலரும் தங்களது வருத்தங்களையும் அதேநேரம் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்

சேவை அமைப்பு பிரதிநிதி, வியாபாரிகள் சங்க உறுப்பினர், சட்ட நிபுணர் இன்னபிற பெயர்களில் கலந்து கொள்ளாமல் இருந்தால் சரிதான்!.. என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எனக்கென்னவோ மோடி ஆதரவாளர், பிஜேபி ஆதரவாளர் என கூட்டிட்டு வருவாங்க டிவிக்கள்ல என்கிறார் ஒருவர்.

அப்படி யார் போனாலும் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் எனவும் அறிக்கை விடணும். #வரவேற்கத்தக்க_முடிவு  தாமதமான முடிவுதான். ஆனால் வரவேற்கிறேன். நல்லது நடக்கும் என்றே பலரும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

bjp annct - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.