2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் வணிகம்

budget - 2026

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

பிரதமர், மோடி தலைமையிலான, புதிய அரசின், முதல் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறை.

இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுவிட்டதால் ரயில்வே திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் வருமான வரிச்சலுகை, விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

தற்போதைய பட்ஜெட் உரையிலும் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.