ஆளும் கட்சியின் தலைவர் ஒருவரை கடத்திய மாவோயிஸ்டுகள்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20190710 WA0018 - 2026

ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவரை மாவோயிஸ்டுகள் கடத்தி உள்ளனர்….

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவர், முன்னாள் எம் பி டி சி உறுப்பினர் ஸ்ரீனிவாசராவை மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை விடிகாலை கடத்தியுள்ளார்கள்.

இதுவரை அவர் இருக்குமிடம் தெரியவில்லை. இதனால் குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.

விளை நிலங்களை லீசுக்கு எடுத்து பயிரிடும் விஷயத்தில் சீனிவாச ராவை கடத்திருப்பார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் பயிரிடும் விஷயமாக  மலை வாழ் மக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் பயிர் விளைவிக்கிறார்கள்.

மலைவாழ் இன மக்களுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு  எடுத்துக் கொண்டு பயிரிட்டு வருகிறார்கள்.

ஐந்தாண்டு காலத்திற்கு சீனிவாச ராவு இந்த பூமியை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிகிறது.

நான்கு ஆண்டுகளாக ஸ்ரீநிவாச ராவு இந்த நிலத்தில் பருத்தியும் நெல்லும் பயிரிட்டு உள்ளார்.

கொத்துரு என்ற இடத்தில் சீனிவாசராவு முன்பு எம்பிடிசி யாக பணியாற்றினார்.

ரிசர்வேஷன் காரணமாக இந்த முறை அவர் போட்டியிடவில்லை.

சீனிவாசராவ் கடத்தப்பட்ட விஷயமாக விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி சுனில்தத் தெரிவித்தார்.

சுமார் 15 பேர் ஆயுதங்களோடு வந்து 45 வயதான தன் கணவர் சீனிவாசராவை கடத்திச் சென்றதாக அவர் மனைவி துர்கா தெரிவித்தார்.

தன் கணவனை விடுவிக்கும்படி தானும் மகனும் குறுக்கிட்டபோது மாவோயிஸ்டுகள் தம்மை அடித்ததாக கூறினார்.

IMG 20190710 WA0019 - 2026அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

நான்கு டிராக்டர்களில் கிராமத்தார் செவ்வாயன்று அருகில் உள்ள சட்டீஸ்கர் காடுகளில் தேடுதலில் இறங்கினார்கள்.

ஆனால் சீனிவாசராவின் அடையாளம் தெரியவில்லை. மாவோயிஸ்டுகளிடமிருந்து எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.