பிரண்டையின் சாற்றை நெய்யையும், பாலையும் கலந்து உட்கொண்டால் உடைந்த எலும்புகள் இணையும்.
பிரண்டைத் துண்டைபொடியாக நறுக்கி,காய்ந்த மிளகாயை சேர்த்து,எண்ணெயில் வறுத்து,கருகி வரும் போது ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை டம்ளராக வரும் போது இறக்கி வடிக்கட்டி இளஞ்சூட்டுடன் குடித்தால் நீர் இறங்கும்.
பிரண்டையை, நெய்யில் பொறித்து காய வைத்து பொடித்து ,காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தமூலம் குணமாகும்.



