ரோவர்,லக்கி,சுல்தான் நடிக்கும் படம் பௌவ் பௌவ்.இந்த பெயர்கள் அனைத்தும் நாய்களின் பெயர்கள்.
இவைகளுடன் மாஸ்டர் அஹான், வி.சிவா, தேஜஸ்வி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி உள்பட 12 மொழிகளில் வெளியாகிறது. இயக்கம், பிரதீப் கிளிக்கர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் குறிப்பிடுகையில், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அவசரமாக இயங்குகின்றனர்.குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடம் மட்டும்தான் உண்மையான அன்பும், பாச உணர்ச்சியும் இருக்கிறது. பெரியவர்கள் தயவுசெய்து அதை காணாமல் செய்துவிடாதீர்கள் என்று வலியுறுத்தும் படம் இது. இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் காதல் டூயட் கிடையாது.



