இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்! செல்ஃபோனால் சிதைந்த முகம்!

அடடே... அப்படியா? தமிழகம் பொது தகவல்கள்

cell phone - 2026சாலையில் போகும்போதொ,அல்லது   வாகனம் ஓட்டும் போதோ செல்ஃபோனில் பேசிய படியே செல்பவர்களை  அன்றாடம் காணமுடியும். இத்தகைய  அலட்சியப்போக்கால் பலரும் விபத்துக்குள்ளாகிறனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் ஹெல்மெட்டிற்குள் செல்ஃபோனை வைத்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவருக்கு, செல்ஃபோன் சூடாகி வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது சொந்த ஊரான புலியூருக்கு இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்ஃபோனில் அழைப்பு வந்துள்ளது. dameged face - 2026அந்த அழைப்பிற்கு பதிலளித்து, செல்ஃபோனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிக்கொண்டே  பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது திடீரென அவரது செல்ஃபோன் சூடாகி, வெடித்துள்ளது. இதனால் நிலைகுலைந்த அவர் பைக்கிலிருந்து தடுமாறி விழுந்துள்ளார்.

செல்ஃபோன் வெடித்ததில் முகத்தின் ஒரு பகுதி சிதைந்துபோனது.பொதுமக்கள் அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.