நெல்லை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி மனு..!

nellai vhp petition - 2026

அருள்மிகு அழியாதீஸ்வரர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோவிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது! விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி தலைமையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திங்கள் கிழமை இன்று மனு அளித்தனர்.

இந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது…திருநெல்வேலி நகர் பகுதியில் கருப்பந்துறை அருள்மிகு அழியாத ஈஸ்வரர் திருக்கோவில் அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு செய்யும் திருக்கோவில். பிரதோஷம் மாத சிவராத்திரி மகாசிவராத்திரி காலங்களில் மேற்படி கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு வசதி செய்யாமல் கோவில் பின்புறம் வழியாக மிகக் குறுகிய பாதையில்தான் உள்ளே சென்று வருகின்றனர்.

திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 7 மற்றும் 8 ஆகிய எல்லைகளைக் கொண்ட நிலம் உள்ளன. இந்த திருக்கோவிலில் நந்தவனம் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் கோவில் நிலங்களை கருப்பு துறையைச் சேர்ந்த எல் தர்மராஜ் மற்றும் எல் அருளானந்த ஜார்ஜ் ஆகியோர் நந்தவன கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மேற்கொண்டு கட்டடங்களையும் கட்டி வருகின்றனர்

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

திருக்கோயிலின் பின்புறம் கட்டடங்கள் மின் இணைப்பு எண் tnad1307 பெற்று சட்டத்திற்குப் புறம்பாக மின் இணைப்பு பெற்றுள்ளனர். சர்வே எண் 7 மற்றும் 8 விவசாய நிலங்கள் திருக்கோவில் பெயரில் பட்டா உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டடங்களை அப்புறப்படுத்தி புதிய மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக கோவிலின் முன்புறம் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால், ஊர் மக்களை ஒன்றிணைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறோம்.

-என்று திருநெல்வேலி விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது!

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories