‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர்! தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினிமா வணிகம் விளையாட்டு

vgsidhartha - 2026

‘கஃபே காஃபி டே’ நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

இந்த நிலையில், காஃபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரங்கநாத் தற்போது அந்த நிறுவனத்தில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நிதின் பக்மானே நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை முடிவு, தொழில் முனைவோர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொழிலில் ஏற்படும் தோல்வியை தொழில் முனைவோர் தங்களது சுயமரியாதை தோல்வியாக கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் அது அந்த தொழிலுக்கு இறுதி முடிவாகிவிடும். துறை தோற்றுவிடும் என்று பிரபல தொழிலதிபரும் மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மகிந்திரா தொழில் முனைவோர்க்கு தனது டிவிட்டர் பதிவில் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், சித்தார்தா பற்றியும் அவரின் நிதிச் சூழல் தொடர்பாகவும் தமக்கு எதுவும் தெரியாது என்றும் ஆனந்த் மஹிந்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.