3 டி படத்தின் மூலம் இயக்குனராகும் மோகன்லால் !

சினி நியூஸ் சினிமா

mohanlaal 1 - 2026நடிகர் மோகன்லால் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.

இதுவரை இவர் 340-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.முக்கியமாக 5 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பெருமை படக்கூடிய உயரிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் மோகன் லால்.

இந்நிலையில், இவர் முதன்முதலாக இயக்குனராக உள்ளார்.மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோவின் கதையை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் இயக்கும் படத்திற்கு பாரூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கான 3 டி ஃபேண்டஸி படமாக அமையவுள்ளது. வாஸ்கொடகாமாவின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஒருவரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கதை 400 வருடத்துக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில், ஸ்பானிஷ் சினிமாவின் முக்கிய நடிகர்களான, பாழ் வேஹா, ரஃபேல் அமர்கோ ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன் லால்.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.