சென்னை வந்த விமானத்தில் கோளாறு ! பத்திரமாய் தரையிறக்கிய விமானி !

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள்

vimanam - 2026நேற்று டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, கீழே இறக்கும்போது, விமானத்தின் சக்கரம் இயங்கவில்லை.வ்

இதனால், விமானி வானத்தில் வட்டமடித்தபடியே, சக்கரத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உடனே இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால், விமான இறங்கு தளத்தில் தீயணைப்பு வண்டிகள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் விமானம் தரை இறக்கப்பட்டபோது, திடீர் என்று விமானத்தின் சக்கரம் இயங்கத் தொடங்கியது. அதில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் அங்கு சிறிய பதட்டமும் பரபரப்புமும்  ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.