அஜித் படம் பார்க்க விடுமுறை கொடுங்க..! வைரலாகும் கல்லூரி மாணவன் கடிதம்..!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nkp 2 - 2026

நடிகர் அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்டபார்வை. இன்று திரைக்கு வந்து, இளைஞர்கள் பலரின் ஆர்வத்துக்கு தீனி போட்டு வருகிறது!

இந்த நிலையில், இன்று வியாழக் கிழமை என்பதால், கல்லூரி, பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டம் போட்டுவிட்டு, படத்துக்குச் சென்றுள்ளனர்.  அஜித் ஃபேன்களாக தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலர் இவ்வாறு கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்து படம் பார்க்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேர்கொண்டபார்வை படம் பார்க்க எனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கல்லூரி மாணவன் ஒருவன் எழுதிய கடிதம் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் இது குறித்து விளக்கம் கேட்டு அறிவுரை கூறியுள்ளது.nkp letter - 2026

நாகப்பட்டினம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்  ஒருவர் தனது துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்கள் படத்திற்கு – என் கே பி போக இருப்பதால் நாளை 8 8 2019 அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி, என்று ஏழாம் தேதி கையெழுத்திட்டு விடுப்புக் கேட்புக் கடிதத்தை கொடுத்திருக்கிறார்.

இந்தக் கடிதம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.