25-03-2023 10:15 PM
More
  Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): மேஷம்

  To Read in other Indian Languages…

  குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): மேஷம்

  குரு பெயர்ச்சி

  குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
  20.11.2021 முதல் 13.04.2022 வரை

  நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

  வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

  அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

  வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

  gurupeyarchi2021 2022
  gurupeyarchi2021 2022

  குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

  குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

  குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
  குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
  ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
  மொபைல்(வாட்ஸப்) 8056207965,
  லேண்ட்லைன் : 044-35584922
  Email ID : [email protected]


  1 mesham

  மேஷம்

  அஸ்வினி 4 பாதங்கள்,
  பரணி 4 பாதங்கள்,
  கிருத்திகை 1ம் பாதம் முடிய


  மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி 20.11.2021  முதல் மிக நன்றாக இருக்கிறது வாழ்வில் எல்லா வளமும் பெறக்கூடிய நேரமாக இருக்கும் கடந்த காலத்தில் கும்பத்தில் குரு வரும்போது சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம் அது இப்பொழுது நீங்கும் உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலையை தொடங்குவீர்கள் அல்லது புதிய வேலை உங்களை தேடி வரும் அது பொருளாதாரத்தை உயர்த்தும்

  உங்களுடைய தேவைகள் பூர்த்தி ஆகும் சொந்த தொழில் செய்வோர், மற்ற பிரிவினர் அனைவருக்கும் நன்றாக இருக்கும் பொருளாதாரம் மேம்படும். பொதுவாக இந்த குருபெயர்ச்சி வெறும் 144 மாதங்கள் நாட்கள் மட்டுமே அதனால் தொழில் ரீதியான மாற்றங்கள் மற்றும் இல்லத்தில் நடக்கவேண்டிய சுப நிகழ்வுகள் நடைபெற இந்த பெயர்ச்சி உங்களுக்கு உதவுகிறது

  வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் கேளிக்கைகள் புனித யாத்திரைகள் சுபச்செலவுகள் என்று விரையம் சுபமாக அமையும் பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை அதிகரிக்கும் அதிகமாக செய்கிறது  உங்கள் எண்ணங்களை முயற்சிகளை தொடங்கலாம் வெற்றி உண்டாகும்.

  மிக நன்றாக இருப்பதற்கு ஜென்மத்தில் ராகுவும் 7ல் கேதுவும்  17.03.2022 முதல்  நட்பாக வந்து நன்மை தருவதாலும் நன்றாக இருக்கும்.

  குடும்பம் : பொதுவாக இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் கடந்தகால திருமணம் மற்ற சுப நிகழ்வுகள் தடை ஏற்பட்டு இருந்தது அது  இப்போது நீங்கி அவை பூர்த்தியாகும் இல்லத்தில் புதுவரவு உண்டாகும் குழந்தை பாக்கியம் சிலருக்கு இருக்கும் பொதுவில் பணத்தேவைகள் பூர்த்தியாகும் படி பொருளாதார நிலை இருக்கும் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை நிறைந்திருக்கும் பிள்ளைகள் உங்களின் ஆலோசனையை ஏற்று நடப்பர் மகிழ்ச்சியைத் தருவார்

  ஆரோக்கியம் : ஆரோக்கியத்தைப் பொருத்தமட்டில் ஓரளவுக்கு வைத்திய செலவுகள் இருந்து கொண்டிருக்கும் உங்களது ஆறுக்குடைய புதன் தற்போது எழில் இருந்தாலும் டிசம்பர் 2 2021 எட்டாம் இடம் செல்வது உங்களது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் அதேபோல 9-க்குடைய குரு லாபத்தில் இருப்பது பெற்றோர்களால் இருந்துவந்த வைத்திய செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்யும் பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் பெரிய ஆரோக்கிய செலவுகள் என்பது இல்லாமல் பரவாயில்லை எண்ணும்படி தேக ஆரோக்கியம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் வாழ்க்கை துணைவர் வழியிலும் பெரிய மருத்துவ செலவுகள் இருக்காது கவலை வேண்டாம்

  வணங்க வேண்டிய தெய்வம் : மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சி அனைத்து பிரிவினருக்கும் சாதகமான பலனை தருகிறது பெரிய சங்கடங்கள் ஏதும் இருக்காது தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹ நிலைகள்  நன்றாக இருந்தால் இன்னும் அதிக நற்பலன்களை பெறலாம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகவும், மனம் சாந்தமாக இருக்கவும் உங்கள் குலதெய்வம் மற்றும் பிள்ளையார் வழிபாடு சிறந்த ஒன்று முடிந்தவரை தான தர்மங்களை செய்யுங்கள் அது நல்ல பலனை தரும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  12 + 7 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,035FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  74FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

  லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

  திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

  கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

  அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

  Latest News : Read Now...