பெண் மூலம் நிர்மூலம் என்று பலரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் உண்மையில், நிர்மூலம் என்பது உண்மையா?
பெண் மூலம் நிர்மலம்… இதைத்தான் தவறாக உச்சரிப்பதால் அப்படி வருகிறது. ஜோதிடர்களே அப்படிச் செய்வதால் பல பெண்களின் திருமணம் தடைப் பட்டுப் போகிறது.
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் மிகுந்த புத்திசாலியாகவும், நேர்மையானவளாகவும் இருப்பாள். தவறு செய்வது மாமனாராக இருந்தாலும் கேள்வி கேட்பதால் மாமனாருக்கு ஆகாது என்பதால் மூல நக்ஷத்திர பெண்ணை தவிர்த்து வந்தனர்.
நாளடைவில் மூலம் மாமனாருக்கு ஆகாது என்று பெண் மூலம் நிர்மூலம் என்று சொல்லி, அதுவே வழக்கமாகிவிட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், மூல நக்ஷத்திர பெண்ணை மணப்பவருக்கு வாழ்க்கை இனிமையாகவும். குடும்பம் நல்ல நிலையில் இருக்கும்.
என் அனுபவத்தில் நிறைய மூல நக்ஷத்திர பெண்கள் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் மாமனார் மாமியார் தீர்க்காயுளுடன் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். எனவே மூலம் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள்.
– ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன்




