ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது. அதானே… என்னதான் சொல்லுங்க, நூத்துக்கு 90 ஜோதிடர்கள் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தொன்னூறு பேர் சொல்லிக்கொண்டிருப்பதால் என்னைப் போல் ஒரு பத்து ஜோதிடர்கள், அது தப்பு என்று சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. அதன் உள்ளர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை.
ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம். அதனால் மிகுந்த புத்திசாலித் தனம் இருக்கும். ஆயில்யத்தில் பிறந்த பெண், தவறு செய்வது மாமியார் என்றாலும் துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி கேட்பார். அதனால் அவர் மாமியாருக்கு ஆகாதவளாக (வேண்டாதவளாக) போய் விடுவாள். இந்த அர்த்தத்தில்தான் அப்படி சொல்லப்பட்டது. ஆனால், பின்னாளில் அது வேறு விதமாக பொருள் கொள்ளப் பட்டு, திரிந்துவிட்டது.
இதை உணரும் பிள்ளையைப் பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒரு சிலராவது உண்மையை உணர்ந்து, ஆயில்யம், கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் தவிர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
– ஜோதிடர் ரவி சாரங்கன் @ லக்ஷ்மி நரசிம்மன்



