spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சந்திராஷ்டமம் என்ன பாடு படுத்துமோனு கவலையா இருக்கீங்களா? அப்ப இதைப் படிங்க...!

சந்திராஷ்டமம் என்ன பாடு படுத்துமோனு கவலையா இருக்கீங்களா? அப்ப இதைப் படிங்க…!

- Advertisement -

சந்திராஷ்டமம் : ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்
-.
சந்திரனின் முக்கியத்துவம் : ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும்.

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.-
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

சந்திராஷ்டமம் நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன் உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் இது என்றால், – சந்திராஷ்டமம் வரும் நட்சத்திர நாள் இதுதான்…

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு – அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் சந்திராஷ்டமம்… என்பது போல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்..!

அஸ்வினி – அனுஷம்
பரணி  -கேட்டை
கிருத்திகை – மூலம்
ரோகிணி – பூராடம்
மிருகசீரிஷம் – உத்திராடம்
திருவாதிரை திருவோணம்
புனர்பூசம் அவிட்டம்
பூசம் சதயம்
ஆயில்யம் பூரட்டாதி
மகம் உத்திரட்டாதி
பூரம் ரேவதி
உத்திரம் அஸ்வினி
அஸ்தம் பரணி
சித்திரை கிருத்திகை
சுவாதி ரோகிணி
விசாகம் மிருகசீரிஷம்
அனுஷம் திருவாதிரை
கேட்டை புனர்பூசம்
மூலம் பூசம்
பூராடம் ஆயில்யம்
உத்திராடம் மகம்
திருவோணம் பூரம்
அவிட்டம் உத்திரம்
சதயம் அஸ்தம்
பூரட்டாதி சித்திரை
உத்திரட்டாதி சுவாதி
ரேவதி விசாகம்

சந்திராஷ்டமம் சஞ்சாரத்தில் சேரும் கோள்களாலும் மாறுபடுவதுண்டு. பாவியான 12 ம் அதிபதியானால் நஷ்டமும், 4, 8,12 அதிபதி சேர்கையானால் விபத்தும் 2, 11,6 அதிபதி சேர்க்கை பார்வையுடன் சஞ்சாரம் இருக்குமானால் அதிர்ஷ்டமாகவும் மாறுவதுண்டு. 8மிடம் ஒரு கொதிகலன் போல. நன்மையோ தீமையோ அபரிதமாக கிடைக்கும் இடம். இந்த கிரஹ சேர்க்கை எந்த ராசியில் வேண்டுமானாலும் நடக்கலாம்.

தகவல்: யு.டி.ஆழ்வார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe