ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மேஷம்

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

மேஷம் :
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம்பாதம் முடிய)   
55/100

மேலோட்டமாக பார்த்தால் உங்கள் ராசிக்கு 2ல் ராகு 8ல் கேது இது நல்ல பலனை தராது ஆனால் ராகு/கேது சஞ்சரிக்கும் நக்ஷத்திர அதிபதிகள் பலம், இந்த காலத்தில் மற்ற கிரஹ சஞ்சார பலம் ஓரளவு நன்றாக இருப்பதால் கவலை வேண்டாம். பொறுமை நிதானம் யோசித்து செயல்படல் என்று இருந்தால் நன்மை. மேலும் சந்திரனின் நக்ஷத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம் அதிக நன்மை உண்டாகும். 27.01.2021 – 25.09.2021 வரை

குடும்பம் பொருளாதாரம் : ஜூன் 2,2021 வரை சந்தோஷம் புதிய திட்டங்கள் நிறைவேறுதல், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குரு, புதன், சுக்ரன் மூலம் நல்ல சூழல் உருவாகுதல் கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகள் மூலம் சந்தோஷம், புதுவீடு போகுதல், பண வரவு என்று நன்றாக இருக்கும். பின் பிப்ரவரி 9, 2022 முதல் ஏப்ரல் 12 வரை கொஞ்சம் மன சஞ்சலம், விட்டுக்கொடுத்து போனால் பொறுமை அமைதி கொண்டால் ஓரளவு நன்றாக இருக்கும். மற்ற கிரஹ சஞ்சாரங்கள் ஓரளவு நன்மை தந்தாலும் குரு, புதன், சனி நன்மை தராது. 09.02.2022 வரை எவ்வளவு சேமிக்க முடியுமோ சேமித்தால் அடுத்துவரும் காலங்கள் கஷ்டம் இல்லாமல் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : ராகு உடல் ஆரோக்கியத்தை மனதை பாதிப்பதாக இருந்தாலும் அது பிப்ரவரி 9,2022க்கு மேல் கேதுவின் சஞ்சாரத்தால், பெரிய உடல் பாதிப்பு வராது ஏற்கனவே இருக்கும் வியாதிகள் இருந்து கொஞ்சம் படுத்தும். வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை எடுக்கவும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு போன்றவை ஓரளவு நன்மை தரும்.

உத்யோகஸ்தர்கள் : அனைத்து பிரிவினரும் 02.06.2021 வரை பொறுமை காக்கவும் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல வேலை கிடைக்கும் ஜூன் பிறகு 09.02.2022 வரை மிக நல்ல காலம் விரும்பிய இடமாற்றம், நல்ல உத்தியோகம் வெளிநாட்டு வாய்ப்பு, வீடு மனை யோகம், திருமண பாக்கியம் என்று மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. 09.02.22 – 12.04.2022 வரை கொஞ்சம் மந்தமாக இருக்கும் எதிலும் கவனம் தேவை வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை நண்பர்களே ஏமாற்றுவார்கள். பகை அதிகரிக்கும்.

தொழில் செய்வோர் (அனைத்தும் விவசாயம் அரசியல் கலை உட்பட): 10,11க்குடையவர் சனி, 6க்குடையவர் புதன் இருவரும் ஓரளவு நன்றாக இருப்பதால் இந்த பெயர்ச்சி முழுவதும் பரவாயில்லை என்று இருக்கும். அதே நேரம் சுக்ரன் & கேது இணைவு குரு இவர்கள் மற்றும் 2ல் ராகு சுக்ரனின் நக்ஷத்திரத்தில் அதனால் 9.02.22 வரையிலுமே ஏற்றம் இறக்கம் இருந்துகொண்டிருக்கும். அரசாங்க தொந்தரவு இருக்கலாம் கணக்கு வழக்கை சரியாக வைத்துக்கொள்வது தொழிலாளர்கள் தொண்டர்கள் ரசிகர்கள் என்று மோதல்போக்கை கடைபிடிக்காமல் இருப்பது நன்மையை தரும். 02.06.2021 – 09.02.2022 வரையில் சிரமம் அதிகம் இருக்கும் அதற்கு முன் அதற்கு பின் நன்றாக இருக்கும். மொத்தத்தில் சுமார். திட்டங்களை யோசித்து செயல்படுத்துவது வார்த்தைகளை விடுவதில் கவனம் என்று இருந்தால் நலம் உண்டாகும்.

மாணவர்கள் :  23.09.20 – 02.06.21 வரை ஓரளவு முன்னேற்றம் இருக்கும் புதனும், புதன் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் கேதுவும் நன்மை செய்வர். வெளிநாட்டு படிப்புக்கு முயற்சிப்பவர் வெற்றி பெறுவர். நல்ல தேர்ச்சி இருக்கும். 02.06.21 – 09.02.2022 வரை கொஞ்சம் கவனம் தேவை புத்தி தடுமாற்றம் இருக்கும். ஆசிரியர் பெற்றோர் அறிவுரை கேட்பது நல்லது. 09.02.22 – 12.04.22 வரை நன்றாக இருக்கும் நினைத்தது நடக்கும் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பொதுவில் இந்த பெயர்ச்சி பரவாயில்லை

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories