
ராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..
ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)
அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.
| லக்னம் 05.14 | (செவ்வாய்) 02.40 | ராகு 29.59.99 | |
| கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு | சுக்ரன் 25.05 | ||
| (சனி) 01.14 | |||
| குரு 23.27 | சந்திரன் 29.44 கேது 29.59.99 | புதன் 01.20 | சூரியன் 06.48 |
கடகம் :
(புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம்) :
85/100
ராகுவால் நன்மை பெறும் ராசி இது. பொதுவாக ராகு/கேது ஜென்ம ராசிக்கு 3,6,10,11ல் சஞ்சரிக்கும்போது நன்மை அதிகம் இருக்கும் என்பது பொதுவிதி. இப்பொழுது ராகு 11லும் கேது 5லும் சஞ்சரிக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் 5ல் கேது கௌரவ பாதிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம் பாதித்தல், பணத்தட்டுப்பாடு என தரும் ஆனால் கேது இங்கு நீசம் என்ற ஒரு நிலை இருப்பதால் இது இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ராகு அதிக நன்மை தரப்போகிறார். ராசியாதிபதியின் ரோகிணி நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் 27.01.2021 – 25.09.2021 வரையில் மிக அருமையாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
குடும்பம் பொருளாதாரம் : ராகு 11ல் குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்வுகள் உண்டாகுதல், திருமணம் எதிர்பார்த்தோர்க்கு திருமணம் அமைதல், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை, சொந்த தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம், வீடு வாகன யோகங்கள் அமைதல் உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைத்தல், விருந்து கேளிக்கைகள், 5க்குடைய செவ்வாய், லாபாதிபதி சுக்ரன், சூரியன் இவர்களும் 7ல் வரும் குரு சனி என்று பல கிரஹங்களும் நல்லதை செய்வதால் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிக்ஷம் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் : வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்ப அங்கத்தினர்கள், வாழ்க்கை துணைவர் என்று அனைவரது ஆரோக்கியமும் நல்ல முன்னேற்றம் இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும். 02.06.2021 – 09.02.2022 இந்த காலங்களில் கொஞ்சம் கவனம் தேதை பெற்றோர் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 4,9 அதிபதிகள் சஞ்சாரம் சனியின் தொடர்பு மருத்துவ செலவை கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : புதிய வேலை தேடுவோருக்கு உடன் கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் சிலருக்கு உண்டு. வேலை பளு குறையும். உழைப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் இவை இருக்கும். இருந்தாலும் 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் வேலை பளு அதிகரிக்கும் சக தொழிலாளியால் தொல்லை வரும். விரும்பாத இடமாற்றம் உண்டாகும் ஆனாலும் ஜீவன வகையில் பாதிப்பு வராது. அதன் பின் நல்ல லாபம் உண்டாகும்
சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல்) : நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள், நாள்பட்ட சரக்குகள் விற்று லாபம் வரும். இதுவரை சிரமமாக இருந்த தொழில் மந்த நிலை மாறி வருவாயை தருவதாக அமையும். ராகு 11ல் இருப்பது சூரியனும் பலமாய் இருப்பது அரசாங்க ஆதரவு, மாற்று மதத்தவர், மொழியினர் மூலம் லாபம், கேட்ட வங்கி கடன் கிடைத்தல், தொழில் விரிவாக்கம் புகழ், பெயர், அரசியல் செல்வாக்கு என்று நன்றாகவே இருக்கும். அதே நேரம் சனி, கேது சம்பந்தம், சனியின் வக்ர காலங்கள் என்று 09.02.22 வரையில் சில சிறு பிரச்சனைகள் வழக்குகள் வரும் கவனம் தேவை பெயருக்கு களங்கம் உண்டாகும். நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. ராகு அடுத்த ராசிக்கு பெயர்ந்த பின்னும் நன்மை தரும்
மாணவர்கள் : உற்சாகமாக படிப்பீர்கள் நல்ல மதிப்பெண், விரும்பிய பள்ளி, கல்லூரி கிடைக்கும், ஆசிரியர் பெற்றோர் ஆதரவு கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். சிரத்தையுடன் படிப்பீர்கள் அதே நேரம் 7ல் சனி குரு சஞ்சாரம் நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். நண்பர்களால் தொல்லை வரும் கவனம் சிதறும் படிப்பில் தடை ஏற்படும்
சர்வே ஜனா சுகினோ பவந்து:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM




