
ராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..
ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)
அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.
| லக்னம் 05.14 | (செவ்வாய்) 02.40 | ராகு 29.59.99 | |
| கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு | சுக்ரன் 25.05 | ||
| (சனி) 01.14 | |||
| குரு 23.27 | சந்திரன் 29.44 கேது 29.59.99 | புதன் 01.20 | சூரியன் 06.48 |
சிம்மம் : (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) : 60/100
கடந்தகாலங்களில் ஏற்பட்டதை போலவே தற்போதய ராகு பெயர்ச்சியும் நன்மைகளை தருவதாக இருக்கு பத்தில் ராகு இருவித வருவாய், பூமி லாபம், வீடு வாங்குதல், பிள்ளைகளால் நன்மை, குடும்பத்தில் சுப நிகழ்வுகள், 6ல் இருக்கும் சனி குரு அவர்கள் பங்குக்கு எதிரிகள் கடன் தொல்லை வியாதிகள் இவற்றை இல்லாமல் செய்வர். 4ல் கேது பலவீனமாக இருப்பதால் கெடுதல் ஏதும் விளையாது கொஞ்சம் மன அழுத்தம் இருந்து கொண்டிருக்கும் தியானப்பயிற்சிகள் உதவும். பொதுவில் இந்த ராகு பெயர்ச்சி 12.04.2022 வரையும் கூட பெரிய கெடுதல்கள் இல்லை. ஜனன ஜாதக கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். மேலும் 9க்குடைய செவ்வாய் சஞ்சாரம் 25.01.2022 வரையிலும் நன்று அதனால் வேண்டியது ஆசைப்பட்டது கிடைக்கும்.
குடும்பம் பொருளாதாரம் : 2ம் இடம் புதன் நல்ல நிலையில் இருப்பதாலும் குருவின் 2ம் இடத்து பார்வை அக்டோபர் 2020 முதல் வருவது குடும்பத்தில் சுப நிகழ்வுகள், திருமணம், புதிய உறவுகள் உண்டாகுதல் என்று சந்தோஷத்தை கொடுக்கும் 10ல் ராகு வருவாயை அதிகரிக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். நினைத்த தீர்த்த யாத்திரைகள் பயணம் நிறைவேறும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெரிய கஷ்டங்கள் பொருளாதார சிக்கல்கள் 12.04.2022 வரை இல்லை.
உடல் ஆரோக்கியம் : நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாதிகள் தனிய ஆரம்பிக்கும். புதிய வியாதிகள் உண்டாகாது. 7க்குடைய சனி 6ல் மறைவது போல இருந்தாலும் அது ஆட்சி வீடு என்பதால் வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்திலும் பெரிய பாதிப்புகள் இருக்காது வைத்திய செலவு குறையும். குடும்ப அங்கத்தினர்களது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
உத்தியோகம் (அனைத்து பிரிவினரும்) : வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தற்போதய வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும் அல்லது இதைவிட நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடுவோர் அயல்நாட்டில் வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். அதே நேரம் வேலை பளு, சக தொழிலாளியால் மன விரோதம் 02.06.2021 – 09.02.22 வரையிலான காலத்தில் பத்துக்குடைய சுக்ரன் சஞ்சாரம் சரியில்லை வேலையில் கவன குறைவு அதனால் பாதிப்புகள் என்று இருக்கும். கொஞ்சம் அனுசரித்து போவது நிதானித்து செயல்படுவது என்று இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வது நல்லது.
சொந்த தொழில் (வியாபாரம், கலை, விவசாயம், அரசியல்) : நாள்பட்ட சரக்குகள் விற்று நல்ல லாபம் உண்டாகும். வங்கி கடன் புதிய தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம் அதனால் புகழ் அந்தஸ்து என்று நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். தொழிலாளர்கள் உங்கள் மனம் அறிந்து நடப்பர், போட்டிகளை ஜெயித்து லாபத்தை பார்ப்பீர்கள். இருந்தாலும் 10க்குடைய சுக்ரன் மற்றும் 6ல் மறைந்த குரு அவ்வளவு நன்மை தரவில்லை எதிலும் ஒரு கவனத்துடன் இருப்பது, புதிய முயற்சிகளை நிதானத்துடன் செயல்படுவது தக்க ஆலோசனை பெறுவது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டும் யோசனைகளை சொல்வது, கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது என்று இருந்தால் பெரிய தொல்லைகள் இல்லை. இருந்தாலும் முன் யோசனை உள்ளவர் நீங்கள் என்பதால் தப்பித்துவிடுவீர்கள் அதிக சிரமம் இருக்காது.
மாணவர்கள் : படிப்பில் கவனம் இருந்தாலும் பணம் செலவு செய்வதில் கவனமும், ஆசிரியர் பெற்றோர் அறிவுரை ஏற்ப செயல்படுதலும், நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையும், கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதில் தக்க ஆலோசனை பெறுவதும் நன்மை தரும். போட்டி பந்தயங்கள் வெற்றியை தந்தாலும், படிப்பில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். புதன் சஞ்சாரம் புதனின் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் கேது மன உளைச்சலை தரும். தியானப்பயிற்சி, இறைவணக்கம் நன்மை தரும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM




