
ராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல் 12.04.2022 இரவு 8.57.41 வரை..
ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)
அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.
லக்னம் 05.14 | (செவ்வாய்) 02.40 | ராகு 29.59.99 | |
கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு | சுக்ரன் 25.05 | ||
(சனி) 01.14 | |||
குரு 23.27 | சந்திரன் 29.44 கேது 29.59.99 | புதன் 01.20 | சூரியன் 06.48 |
மீனம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
85/100
உங்கள் ராசிநாதன் 10ல் ஆட்சி, லாபாதிபதி 11ல் ஆட்சி, 2க்குடைய குடும்பஸ்தானாதிபதி 2ல் ஆட்சி இந்த நிலையில் ராகு 3ல், கேது 9ல் பெயர்ச்சி நடக்கிறது. பொதுவாக ராகு/கேது ராசிக்கு 3,6,10,11ல் இருந்தால் அதிக நன்மையை செய்வதாக நூல்கள் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் இந்த பெயர்ச்சி அமைய போகிறது. காரணம் குரு, சனி, செவ்வாய் புதன் சுக்ரன் சூரியன் என்று அனைத்து கிரஹங்களும் பெரும்பாலான சஞ்சாரங்கள் நன்மையை செய்கின்றன. மகிழ்ச்சி அதிகரிக்கும். கேது 9ல் கெடுதல் செய்யாது என்பது உறுதி. கேது உச்சம் புதன்,சனி,குரு நக்ஷத்திரக்காலில் சஞ்சரிக்கும்போது அந்த அதிபதிகளின் பலனை தரும்
குடும்பம் & பொருளாதாரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். திக்கெட்டிலும் புகழ் பரவும். மனம் பலம் அடையும், பணவரவு அதிகரித்து இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். பெரும்பாலும் கஷ்டம் இல்லாத நிலை இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பிள்ளைகளால் சந்தோஷம் பெற்றோர் உறவினர்களால் நன்மை என்று நன்றாகவே இருக்கும்.
உடல் ஆரோக்கியம் : 6க்குடைய சூரியனின் சஞ்சாரம் பலமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. மேலும் மகிழ்ச்சி அதிகம் இருப்பதால் மனோபலம் கூடி வியாதிகளை இல்லாமல் செய்திடும். 3ல் ராகு நோய்களை நீக்கிவிடும். வாழ்க்கை துணைவர் பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய பிரச்சனைகள் இருக்காது.
உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): பத்துக்குடையவரும் உங்கள் ராசியதிபதியே அவர் அக்டோபரில் லாபத்தில் சஞ்சரித்து ராகுவை பார்ப்பதால் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்றெல்லாம் நடக்கும். மேலும் 6க்குடைய சூரியனும் வருமானத்தை அதிகரிக்க செய்கிறார். வேலை தேடிக்கொண்டிருப்போருக்கு இந்த மாதத்தில் நல்ல வேலை கிடைத்திடும். வெளிநாட்டு உத்தியோக வாய்ப்பும் உண்டு. மேலும் வேலையில் நல்ல பெயர் புகழ், எல்லோருடனும் அனுகூலமான நிலை என்று அடுத்த 18 மாதங்களும் இருக்கும். ராகு செவ்வாய்,சந்திரன், சூரியன் நக்ஷத்திர காலில் சஞ்சரிப்பதால் குடும்பஸ்தானாதிபதி செவ்வாய், பூர்வ புண்யஸ்தானாதிபதி சந்திரன், வருமான ஸ்தானாதிபதி சூரியன் இவர்கள் தருவதை போல ராகு லாபத்தை தரும்.
சொந்த தொழில்(வியாபாரம், விவசாயம், கலை, அரசியல், அனைத்து தொழிலும்) : அருமையான பெயர்ச்சி வரும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். வருமானம் பெருகும். பெயர் புகழ் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள், வங்கி கடன், அரசாங்க உதவி, மேல்மட்ட மனிதர்களின் ஆசீர்வாதம் என்று எல்லாம் உண்டாகும். புதிய தொழில் விஸ்தாரணம் வெற்றியை தரும். கஷ்டங்கள் குறையும். எதிரிகள் மறைவர். சினிமா, டிவி, மீடியா, ஃபோட்டோ தொழில் செய்வோருக்கு இன்னும் அதிக லாபம் ஏற்படும். பெயர்ச்சி முழுவதும் நன்மையே கஷ்டங்கள் என்பது தனிப்பட்ட ஜாதகம் சுமாராக இருந்தால் மட்டுமே.
மாணவர்கள் : நல்ல நிலை படிப்பில் நல்ல மதிப்பெண்கள், போட்டி பந்தயங்களில் வெற்றி புதன் சஞ்சாரமும் புதன் நக்ஷத்திரக்காலில் இருக்கும் கேதுவின் சஞ்சாரமும் மிகுந்த நன்மை செய்வதால் நல்ல கல்லூரி விரும்பிய பாடம், கணிதம், எஞ்சினியரிங்க் ஆர்க்கிடெக்ட் , ஆசிரியர் படிப்பு, தத்துவம், கலை போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் வெற்றியை பெறுவர். எல்லோருடைய பாராட்டையும் பெறுவர். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து:
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM