May 11, 2021, 12:06 am Tuesday
More

    மகரம் (பங்குனி மாத பலன்கள்)

    panguni rasipalangal

    சார்வரி வருஷம் பங்குனி மாத ராசி பலன்கள்

    நாளது ஆங்கில வருடம் மார்ச் மாதம் 14ம் தேதி மாலை 06.03.42 மணிக்கு சூரியன் கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். 14.04.2021 இரவு 01.32.06 மணி வரை மீனத்தில் சஞ்சரிக்கிறார்.  அதுவரையிலான ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள்.

    கோச்சார கிரஹ நிலைகள்

    panguni rasi palankal
    2021-maasi-month-predictions

    பொதுக்குறிப்பு: இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வு குரு கும்பராசிக்கு பெயர்வது (கும்பராசி பலனை தருவார்) அதை ஒட்டியும் பலன் சொல்லப் பட்டு இருக்கிறது. மேலும் முக்கியமான தினம் அது அந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள் (சந்திராஷ்டமம் தவிர) இது பொதுப்பலன், அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை அறிந்து கொள்வது சிறந்தது

    makaram rasi - 1

    மகர ராசி : உத்திராடம்- 2, 3, 4 ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்- 1,2 ம் பாதங்கள் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


    ராசிநாதன் ஆட்சி சுமாரான பலனை தருகிறார் கெடுதல் செய்யவில்லை ஆனால் சூரியன், குரு 2க்குடைய பலனை தருவார்,சுக்ரன், மற்றும் 11ல் கேது மாதம் முழுவதும் நல்ல பலனை அள்ளி தருகின்றனர், புதன் 31.03.21 வரை நற்பலனை தருகிறார். இதுவரை பணத்தட்டுப்பாடு சரிந்திருந்த பொருளாதாரம் நல்ல நிலையை அடையும், வளர்ச்சி அதிகம் இருக்கும்,

    ஜீவன வகையில் அதிக லாபம் உண்டாகும் புதிய பூமி, வீடு வாகனம் வாங்கும் யோகமும், இல்லத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி  நோய் நீங்குதல், சுப நிகழ்வுகள் மூலம் புதிய உறவுகள் வருகை என்றும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகம் ஆகும். நினைத்தவை நிறைவேறும்.

    இதுவரை இருந்துவந்த செலவுகள் கட்டுக்குள்வரும். சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பதவி, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம், வேலை தேடுவோர்க்கு அவர்கள் விரும்பிய நிறுவனத்தில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைத்து மகிழ்ச்சி அதிகம் ஆகும்.

    சொந்த தொழில், வியாபாரம் செய்வோர் அதிக லாபம் கடன் அடைதல், வங்கி உதவி அரசு உதவி கிடைத்து சரிந்திருந்த மார்க்கெட் உயர ஆரம்பிக்கும். பொதுவில் நன்மை அதிகம் எனினும் உடல் உஷ்ன பாதிப்பு, மறதி, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அலைச்சல், கால விரயம், வைத்திய செலவு என்றும் உறவுகளின் பிரிவு துன்பம் தரும் நிலையும் இருக்கும். ஆனால் வரும் மாதங்களில் பெரிய பாதிப்பை தராத அளவுக்கு சேமிப்பு இருக்கும்.

    முக்கிய நிகழ்வு/கவனம் : பெரியதாக பாதிப்பில்லை இருந்தாலும் உடல் நலம், குடும்ப அங்கத்தினர் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுதல் வைத்திய செலவை குறைக்கும்.

    சந்திராஷ்டமம்: உத்திராடம் 2,3,4 – 26.03.21, திருவோணம் – 27.03.21, அவிட்டம் 1,2 – 28.03.21

    வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

    ராமர், ஆஞ்சநேயர், கோயிலில் விளக்கேற்றுதல், ராம நாமம் சொல்லுதல், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றுதல், முடிந்த தான தர்மங்களை செய்தல், இயலாத வயோதிகர்கள் ஏழைகளுக்கு ஒத்தாசை செய்தல் அன்ன தானம் நன்மை தரும்.

    மாத ராசிபலன் கணிப்பு :
    லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
    ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
    D1, I Block, Alsa Green park, Near MIT Gate
    Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
    Email: [email protected]
    Phone: 044-22230808 / 8056207965
    Skype ID: Ravisarangan

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,234FansLike
    0FollowersFollow
    19FollowersFollow
    74FollowersFollow
    1,178FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »