
பிராமணர் கல்வி கொடுக்கவில்லை , ஈரோட்டு ராம்சாமியும் அவரின் சீடர் கோடிகளுமே கல்வி கொடுத்தன என அதே ஒப்பாரி! பண்டைய தமிழனுக்கு எழுதபடிக்க தெரியாது என எவன் சொன்னான்? ஓலைசுவடிகளும் ஆலய கல்வெட்டும் சொல்வதென்ன?
எழுத்து வடிவம் எல்லா பண்டைய இனத்துக்கும் உண்டு மெசபடோமியாவின் களிமண் எழுத்துக்கள் 6 ஆயிரம் வருடத்திற்கு முந்தையவை, எகிப்தின் பிரமீடு சித்திர எழுத்துக்கள் 5 ஆயிரம் வருடம் முந்தியவை
அவை எல்லாம் நாளுக்கொடு சேட்டிலைட் விட்டுக் கொண்டிருக்கும் அளவு முன்னேறிவிட்டார்களா?
இவர்கள் சொல்லவரும் விஷயம் பார்ப்பானிய இந்துத்வா கொடுமை பாரீர், நமக்கு கல்வி மறுக்கபட்டது அய்யகோ இந்துத்வா.. சனாதான தர்மம்..
பிராமணன் மற்ற சாதிக்கு கல்வி கொடுக்கமாட்டான், நாமெல்லாம் படித்தது இந்த வெறும் 80 ஆண்டுகளுக்கு உள்ளேதான், அதனால் இதுதான் புரட்சிகாலம் புண்ணாக்கு காலம் , எல்லாம் திராவிட சாதனை என ஏக குரல்கள்
சரி 100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை
ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா?
உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை
அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, பொதுமுறை இருந்தது
இருவகையில் அரசனுக்கான கல்வி வேறு, அது ஆட்சி, போர் முறை, ராஜநீதி என அவனுக்கு போதிக்கபட்டது. கற்ற அரசன் எவனும் பிராமணன் அல்ல
சாதாரண மனிதனுக்கு ஓலை சுவடி எழுத்தும் கூட்டல் கழித்தல் போன்ற சாதாரண கணக்குகள் இருந்தன
செட்டி இனம் இதில் வட்டியினை கணக்கிட கற்றது
ஆக அரசனுக்கொரு கல்வி, பாமர மக்களுக்கு தனி கல்வி என நிலமை இருந்தது
இது போக தொழில் எனப்படும் வாழ்க்கைகான கல்வி தகப்பனிடம் இருந்து மகனுக்கு சொல்லிதரபட்டது
அது கொல்ல பட்டறை, விவசாயம், தச்சு வேலை, படகு செய்தல், சமையல், இரும்பு வேலை, சிற்பம் என குலதொழிலாக இருந்தது
பிராமண இனம் அதை வானசாஸ்திரம் ஜோதிடம் என தன் குலத்துக்கு கற்று தந்தது
அவனவன் தொழிலில் அவனவன் தேறினான், ஒவ்வொரு தந்தையும் தன் வித்தையினை அப்படியே மகனிடம் இறக்கிவைத்தான்
வைத்தியமும் குலம் குலமாக வந்தது , சலவை தொழில் உட்பட எல்லாமும் அப்படியே தொடர்ந்து வந்தது
அன்றொரு கொடுமை இருந்திருக்கின்றது, ஒருவன் தன் தொழிலை தன் குடும்பத்தாரை தவிர இன்னொருவனுக்கு கற்றுதர தயாராக இல்லை
அது சிற்ப தொழில் முதல் போர்கலை வரை இருந்திருக்கின்றது, துரோணர் சம்பவங்களில் இதை காணலாம்
ஒவ்வொருவனும் தன் வித்தை தன் குலம் ஒன்றுக்கே என உறுதியாய் இருந்திருக்கின்றான்
அதுதான் தனக்கும் தன் தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதினான், அவனவன் தொழிலில் அவனவன் சிறந்திருந்தான், ஒருவனுக்கு தெரிந்தது இன்னொருவனுக்கு தெரியாமல் இருந்தது
இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஒன்றாக கூடித்தான் அச்சமூகம் வளமாக வாழ்ந்தது
கொல்லனும் தச்சனும் ஒன்று கூடி மாட்டுவண்டி செய்தனர், கொல்லனும் கல் தச்சனும், தச்சனும் சேர்ந்து அழகிய ஆலயங்களை உருவாக்கினர்
சமூகம் கலைகளிலும் அறிவிலும் வளர தொடங்கியது, ஒரு குலம் இன்னொரு குலத்திற்கு உதவியாக சமூக வாழ்வில் இருந்தது
பிராமண இனம் ஆலயங்களிலும் அரசனிடமும் குனிந்தே நின்றது, என்னதான் அறிவான இனம் என்றாலும் அது அரசனுக்கு அடங்கி கிடந்தது
அரசனே தெய்வம்
அன்று இவ்வளவுதான் கல்வி அதாவது தமிழ் படிப்பது கொஞ்சம் கூட்டல் கழித்தல் , குலதொழில் கல்வி
வெள்ளையன் வந்தே இங்கு நிலமையினை மாற்றினான்
தன் அதிகாரத்தை நிறுத்த அவனுக்கு ஆங்கிலம் அதிகம் தெரிந்தோர் தேவைபட்டனர், பிராமண சமூகம் அதை பயன்படுத்தி ஆங்கிலம் கற்றது
அரசன் முன் குனிந்து அவனுக்காக பலமொழி கற்ற அச்சமூகத்திற்கு ஆங்கிலம் கற்பதும் எளிதாக வந்தது இதெல்லாம் 1800களின் காலங்கள்
அதன் பின் வெள்ளையன் நவீன கல்வியினை திறந்தான், அதில் பிராமணர் ஆசிரியராயினர்
அவர்கள் கூலிக்கே பணியாற்றினர், எந்த சாதி படித்தாலும் அவர்கள் கற்பித்தனர்
அதில் எல்லா சாதியும் படித்தது, எல்லோருக்கும் பிராமணர் கற்பித்தனர்
வெள்ளையன் கல்வி கூடங்களில் கிறிஸ்தவ சாயல் தெரிய இந்துக்களின் கல்வி கூடங்கள் பெருகின, பச்சையப்ப வள்ளல், செட்டிகள், ஆதீனங்கள் கல்வி கூடங்களை திறந்தனர் அதிலும் பிராமண இனம் கூலிக்கு பணியாயிற்று
பிராமணன் தனி கல்வி கூடங்களை நடத்தியதாகவும் அங்கு மற்ற சாதிக்கு கல்வி மறுக்கபட்டதாகவும் எங்காவது கேட்டிருக்க முடியுமா? காட்சிகள்தான் உண்டா?
முதல் இரு உலக போர்கள் உலகை மாற்றிபோட விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது, அது சுதந்திர இந்தியாவில் நவீன கல்வியினை கொடுத்தது
இந்திய அரசும் சட்டம், மருத்துவம், விஞ்ஞானம் உட்பட ஏகபட்ட கல்விகளை உருவாக்கி தன் மக்களை படிக்க வைக்க தொடங்கியது அந்த கல்விதான் இன்று நாம் காணும் கல்வி
இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு இதுதான். இதில் எங்கே பிராமணன் யாருக்கு எதை மறுத்தான் என சொல்லுங்கள்
பிராமண ஆசிரியரிடமே அண்ணா படித்தார், அம்பேத்கர் படித்தார், கலைஞரும் தமிழ் படித்தார் அம்பேத்கரின் ஆசிரியர் முதல் அண்ணாவின் ஆசிரியர் வரை பிராமணரே, பெரியாரின் தொடக்க கல்வி ஆசிரியர் யார்?
எல்லாம் அவர்களே.. எந்த சாதிக்கும் கற்றுகொடுக்க அவர்கள் மறுத்ததில்லை, கூலிக்கு வேலை செய்தனர் எல்லோரையும் கற்க வைத்த அந்த இனமே அவர்களிடம் அடியும் வாங்கியது
சும்மா 100 வருடத்துக்கு முன் நமக்கு கல்வி இல்லை பிராமணன் மறுத்தான்என்பவனிடம் , 100 வருடத்துக்கு முன் இங்கு என்ன நவீன கல்வி இருந்தது என கேளுங்கள் அதன் பின் பேசவே மாட்டான்
நாம் மறுபடி மறுபடி அழுத்தமாக சொல்கின்றோம், இங்கு நவீன கல்வியினை வெள்ளையனே தொடங்கி வைத்தான் அவன் கல்லூரியும் பள்ளிகளுமாக பெருக்கினான், அதில் மதமாற்றமும் இருந்தது சந்தேகமில்லை ஆனால் இந்து அமைப்புகளும், வள்ளல்களும் , ஆதீனங்களும் சற்றும் பின் தங்காமல் பள்ளி கல்லூரிகளை தொடங்கின
ஏன் நாடார் போன்ற சில சாதிசங்களளே பள்ளிகள் அமைத்தன இதில் வாத்தியார் உத்தியோகத்தில் இருந்த இனமே பிராமண இனம், அவர்கள் கூலிக்கு இருந்தார்களே தவிர நிறுவணம் அவர்களுடையது அல்ல பிராமண சமூகம் நடத்தியதாக ஒரு பள்ளி கல்லூரியினை காட்ட முடியாது, அவர்கள் கூலிக்காரர்கள்
பின் எப்படி தாழ்த்தப்பட்டவன் படிப்பு பெற அவர்கள் தடையாக இருந்திருக்க முடியும்? அன்று வறுமையும் அறியாமையும் சில சமூகங்களை பள்ளி பக்கமே அனுப்பவில்லை, அதற்கு காரணம் வறுமை அன்றி வேறல்ல
இங்கு கல்வி பெருகியதற்கு மெஷினரிகளும், இங்கிருந்த தனவான்களின் நன்கொடையில் உருவான பள்ளிகளும் காரணம் என சொன்னால் அது சரி பின்னாளில் காமராஜர் பலத்த அஸ்திவாரமிட்டார் என்றால் அதுவும் சரி
மாறாக கூலிக்கு வேலை செய்த பிராமணர் கல்வி கொடுக்க வில்லை என்பதும், பெரியார் புரட்சியில் கல்விபெருகிற்று என்பதும் அப்பட்டமான அரசியலும் பொய்யும் ஆகும் வரலாறு அதைத்தான் சொல்கின்றது
((பெரியார் காலத்திலே பிடி பன்னீசெல்வம் வழக்கறிஞராகி இருகின்றார், லண்டன் வரை வட்டமேஜை மாநாடு எல்லாம் சென்றிருக்கின்றார், அவர் பிற்படுத்தபட்டவர். இன்னும் பலர் இருந்திருக்கின்றனர், முத்துராமலிங்க தேவர் போன்றோருக்கு ஆங்கிலம் அனாயாசமாகப் பேசும் அளவு பயிற்சி கொடுக்க பிராமண விற்பனர்கள் இருந்திருக்கின்றார்கள்
அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் எல்லாம் பட்டம் பெற முடிந்திருக்கின்றது கலைஞர் 7ம் வகுப்பு வரை படித்து பெயிலாக முடிந்திருகின்றது, அவருக்கு கல்விசாலை திறந்திருக்கின்றது மற்றபடி அவர் பெயிலானதில் பார்ப்பன சதி இருக்க முடியாது… இதை எல்லா சொன்னால் நாம் ஆரிய அடிவருடி)
- யாரோ ஓர் அறிவாளி!