அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்

உள்ளூர் செய்திகள் திருச்சி

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.செயலாளர் பன்னீர்செல்வம்,முன்னாள் கவுன்சிலர் துளசிராமன் நகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் கலந்து கொண்டு அமராவதி நகர் பகுதியை சேர்ந்த 120 குடும்பத்தினருக்கு அரிசி காய்கறி தொகுப்பினை வழங்கினார்.நிகழ்ச்சியில்
பட்டயதலைவர் முரளிதரன்,புவனாசெந்தில்,பொன்முத்துராமலிங்கம்,தாமஸ்,விஜயசுந்தர்,பெருங்காடு சுப்ரமணியன்,செந்தில்வேலன் மெய்யப்பன்,வெங்கட்,ஆத்மாமதி,சாத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

rotary news photo
rotary news photo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.