May 15, 2021, 8:03 am Saturday
More

  யுவர் ஆனர்… அவர் அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன்… இவர் ஆனா கானா சந்திரன்!

  இவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நாம் கொடுக்கும் வாய்ப்பு, சைக்கோ ரேப்பிஸ்ட்டிடம் லவ் லெட்டர் கொடுக்கும் அழகான பெண்ணின் நிலை

  duraimurugan images - 1

  திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம் நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி, ‘இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப்பட்டிருக்கா?’ எனக் கேட்பார்கள்.. சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு, செயற்குழுன்னு, “நாதாரித்தனத்தையும் நாசூக்காக” செய்யும் கும்பல் அது.. குடும்ப அரசியல்னு நாம பேசிரக் கூடாதாம்.. அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்? இதோ சமீபத்திய நாதாரித்தனம் ஒன்று கீழே..

  2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்குக் கொடுக்க வைத்திருந்த பல கோடி பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான இடத்தில் சிக்கியது.. அந்தப் பணம் சிக்கிய பின் வருமான வரித்துறை ரெய்டு கூட நடந்தது.. இதெல்லாம் நமக்கு ஞாபகத்தில் இல்லாத அளவுக்கு நம் மீடியா பார்த்துக்கொண்டன.. என்ன தான் மீடியா கவனிக்காவிட்டாலும் கோர்ட்டில் கேஸ் நடக்கத்தானே செய்யும்??

  அந்த கேஸ் துரைமுருகனின் சொத்து, பண்ணை, எனப் பிடித்து, இப்போது திமுகவிற்கும் தலைவலியாக வந்து நிற்கிறது.. துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளர் மட்டுமல்லாமல் அதன் டிரஸ்டின் நிரந்தர உறுப்பினரும் கூட.. அதனால் வருமான வரித்துறையின் கவனம், திமுக டிரஸ்டை நோக்கித் திரும்பியது.. ஆஹா இதை நோண்ட ஆரம்பித்தால் மூலப்பத்திரம், பஞ்சமி நிலம், முதல் வித் அவுட் டிக்கெட் வரை பூதம் கிளம்புமே எனப் பீதியடைந்தது திமுக.. இதன் பின் அவர்கள் செய்தது தான் விஞ்ஞான ஊழல் என்பதற்கான உதாரணம்..

  ஆர்.எஸ்.பாரதி, ஆம் மீடியாவை ரெட் லைட் என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிச்சை போட்டு டாக்டர், வக்கீல் என ஆக்கினோம் எனக் கூறிய அதே ஆர்.எஸ்.பாரதி தான்.. இந்த ஆர்.எஸ்.பாரதி மூலம் ஒரு ரிட் மனு போட வைக்கிறது.. அதாவது, “வேலூர் தேர்தலின் போது பிடிபட்ட பணம், கதிர் ஆனந்த் என்பவரின் தந்தையான D.துரைமுருகன் என்பவருக்குச் சொந்தமானது.. அந்த D.துரைமுருகனும், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் வேறு வேறு ஆட்கள்.. இவர் வெறும் துரை முருகன்.. அதனால் திமுகவின் டிரஸ்டை நோண்டக் கூடாது. முடிந்தால் D.துரைமுருகனை மட்டும் நோண்டுங்கள்” என்கிறது அந்த ரிட் மனு..

  குழம்பிப்போன கோர்ட் வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்கிறது.. பதறிப்போன வருமான வரித்துறை ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பிக்கிறது.. எங்குமே வெறும் துரைமுருகன் என இல்லை.. இனிஷியலோடு D.துரைமுருகன் என்றே இருந்துள்ளது.. ஆனால் அந்த D.துரைமுருகன் தான் திமுக பொதுச்செயலாளர் என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.. கொக்கரித்தது திமுக கும்பல்.. கடைசியாக தாசில்தார் ஒருத்தர் மூலம், துரைமுருகனுக்குச் சொந்தமான ஒரு நிலத்தின் பட்டா கிடைக்கிறது.. அதிலும் D.துரைமுருகன் என்று தான் பெயர் இருந்துள்ளது.. ஆனால் ஃபோட்டோவுடன்!!! ஃபோட்டோவில் சாட்சாத் நம் மேக்-அப் மெகாதேவன் சிரித்த மேனிக்கு உள்ளார்.. ஆக D.துரைமுருகனும் வெறும் துரைமுருகனும் ஒன்று தான் என நிரூபனம் ஆகிறது.. உடனே நம் திமுக, ‘இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரம்.. வேற ஃப்ரெஷ்ஷான ஆதாரத்தைக் கொடுங்கள்’ என்கிறது.. ‘இதுக்கு மேல எல்லாம் ஆதாரம் தேவயில்ல, ஒழுங்கா வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு குடுக்குற வழியப்பாருங்க’ எனக் காறித்துப்பி அனுப்பியுள்ளது கோர்ட்..

  இப்போது திமுக டிரஸ்ட் பற்றிய விசாரணை ஐடி துறையின் கீழ் வந்துவிட்டது.. இது போல் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் துரைமுருகன் மாட்டினாலும் பரவாயில்லை, நாம் தப்பித்தால் போதுமென இனிஷியல் மேட்டரை வைத்து விளையாண்டு பார்த்தது திமுக.. ஒரு வேளை அந்த நிலப்பட்டா மட்டும் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னவாகியிருக்கும் என நினைத்துப் பாருங்களேன்.. கதிர் ஆனந்தின் தந்தை D.துரைமுருகனும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வேறு வேறு ஆள் என கோர்ட்டே சொல்லியிருக்கும்.. கண் முன்னே உண்மை தெரிந்தாலும், ஆதாரம் இல்லாமல் யாராலும் அதை மறுக்கவோ நிரூபிக்கவோ முடிந்திருக்காது.. இது தான் நம்மூர் சட்டம்.. அது தெரிந்து தான் இவர்கள் விஞ்ஞான ஊழலில் இருந்து இனிஷியல் வைத்து விளையாடுவது வரை செய்கிறார்கள்..

  ஒரு இனிஷியல் மேட்டரிலேயே, அதுவும் தொழில்நுட்பம் பெருகியிருக்கும் இந்தக் காலத்திலேயே கூட, இத்தனைக் கிரிமினல் வேலைகள் செய்திருக்கும் திமுக, 60களிலும் 70களிலும் என்னவெல்லாம் செய்து ஊழல்களில் இருந்து தப்பியிருக்கும் என நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.. இவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நாம் கொடுக்கும் வாய்ப்பு, சைக்கோ ரேப்பிஸ்ட்டிடம் லவ் லெட்டர் கொடுக்கும் அழகான பெண்ணின் நிலை போன்றது.. அதற்கு மேல் உங்கள் இஷ்டம்..

  • ராம்குமார் (Ram Kumar)

  பழைய திரைப்படங்களில் … மாறுவேடம் என்பதற்கு.. ஒரு சிறிய மருவை மட்டும் ஒட்டினால் போதும் என்கிற அபத்தங்கள் நிறைந்திருக்கும்.

  அது போன்ற ஒன்று…சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. 😀

  The New Indian Express-ல் வெளி வந்திருக்கும் ஆங்கில செய்தியின் விபரச் சுருக்கம் …இங்கு தமிழில்.

  சட்டத்திற்கு …’சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரம்’ என்பது அடிப்படை. இந்த அடிப்படை சட்டவிதிக்குள் -Legal Technicality- க்குள் நின்று விளையாடுவது எப்படி? வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்வது எப்படி? என்பதற்கு சமீபத்திய உதாரணம் இவ் வழக்கு .

  2019…மார்ச் பாராளுமன்ற தேர்தலின்போது…வேலூரில் …திமுக-வின் துரைமுருகன் & அவரது மகன் சார்ந்த இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கு ..நினைவிருக்கலாம்.

  இவ் வழக்கின் நீதிமன்ற விசாரணையில் … திமுகவிலிருந்து …கதிர் ஆனந்தின் தந்தையான துரைமுருகன்… D.துரைமுருகன். ஆனால்.. திமுக டிரஸ்டின் நிரந்தர டிரஸ்டீயும் , திமுக கட்சியின் பொது செயலாளருமான துரைமுருகன் வெறும் துரைமுருகன். அதனால் வேறு வேறு ! என்று ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது ! 😀

  இந்த ரிட் பெட்டிஷனுக்கு ஆதரவாக பொன்முடியும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.

  இதனையடுத்து …ரூபாய் கைப்பற்றப்பட்ட D.துரைமுருகனும் , D இல்லாத வெறும் துரைமுருகனும் ஒரே நபர் தான் என்று ஆதாரம் கொடுக்க வேண்டிய பொறுப்பு & அவசியம் வருமான வரித்துறைக்கு ஏற்படுகிறது. 😀

  இருவரும் ஒரே நபர் தான் என்பதற்கான ஆதாரத்தை தேடியதில்..2005-ல் காட்பாடியில் விவசாய நிலங்களை பட்டா செய்த கிரய பத்திரத்தில் …D.துரைமுருகன் என்கிற பெயரோடு அவருடைய புகைப்படமும் சேர்ந்து இருக்கும் ஆதாரம் சிக்குகிறது.

  இதனை ஹை கோர்ட்டில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் தாக்கல் செய்கிறது. இதற்கு….புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கக் கூடாது என்று வாதிடுகிறது திமுக தரப்பு. நீதிபதி அதனை நிராகரித்து…விசாரணை தொடரும் என்றிருக்கிறார்.


  நம்முடைய நீதித்துறை எப்பேர்ப்பட்ட நீதித்துறை?

  இந்த டிமிக்கா பொதுசெயலாளர் துரைமுருகனும் வேலூர் எம்பி கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகனும் வேறு வேறு என வழக்கு போட்டால் ஒரு நீதிபதி என்ன கேட்டிருக்கவேண்டும்

  சரி இரண்டு துரைமுருகன்களையும் நேராக ஒரே நாளிலே ஒரே நேரத்திலே ஆஜர் படுத்துங்கள். அப்போது இந்த வழக்கை ஏற்றுக்கொள்கிறேன் என உத்தரவு போட்டிருக்கவேண்டுமா வேண்டாமா?

  அதை விடுத்து நீதிபதி என்ன உத்தரவு போடுகிறார்? வருமான வரித்துறை இந்த இரண்டு துரைமுருகன்களும் ஒன்றே என ஆதாரம் கொடுக்கவேண்டும் என.

  எப்படி கதை?

  இவர்களிடம் தான் ஊழல் வழக்குகள் போகின்றன.
  அந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்லுவார்கள் தண்டனை தருவார்கள் என நாமும் நம்புகிறோம்.

  • ராஜசங்கர் விஸ்வநாதன்

  சமூக வலைத்தளப் பகிர்வுகள்


  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,241FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,188FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-